கருவில் இருக்கும் போது நிச்சயிக்கப்படும் திருமணம்! வினோதமான நிகழ்வு
இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தில் சகோதரர்கள் இருவர் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு வைரலானது.
ஹாடி சமூகத்தின் ஜோதிதாரா திருமணம் என இது அழைக்கப்படுகிறது.
ஒரே குடும்பத்தில் பிறந்த இரண்டு சகோதரர்கள் ஒரு பெண்ணை முறைப்படி திருமணம் செய்து கொள்ளும் சடங்காகும்.
கிராம மக்கள் முன்னிலையில் இசை நிகழ்ச்சி கொண்டாட்டங்களுடன் குறித்த திருமணம் நடைபெற்றது.
மணப்பெண் சுனிதா சௌஹான் மற்றும் மணமகன்கள் பிரதீப்- கபீல் ஆகிய மூவரும் இணைந்து முடிவை எடுத்ததாகவும், இதில் தாங்கள் எந்தவித அழுத்தங்களையும் சந்திக்கவில்லை எனவும் கூறுகின்றனர்.
மேலும் பல நூற்றாண்டுகளாக ஜோதிதாரா திருமண சடங்கு தங்கள் சமூகத்தில் இருப்பதாகவும், ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.
ஜோதிதாரா தவிர்த்து ஹாடி சமூகத்தின் பிற திருமண பழக்கவழக்கங்கள் குறித்து பார்க்கலாம்(பிபிசி தமிழில் குறிப்பிட்ட தகவல்களில் இருந்து).
குழந்தை திருமணம்
தாயின் வயிற்றில் இருக்கும்போதே குழந்தையின் திருமணம் குறித்து முடிவு செய்யப்படுமாம், ஆனாலும் குழந்தை வளர்ந்து தனது சம்மதத்தை தெரிவித்த பின்னரே சடங்குகள் நடைபெறும்.
ஜாஜ்டா திருமணம்
மணமகன் தரப்பினர் திருமணத்தை முன்மொழிவார்கள், பெண் வீட்டாரின் சம்மதம் பெற்ற பின்னர் திருமண சடங்குகள் நடைபெறும், இந்த வகை திருமணத்தில் மணமக்கள் சத்தியபிரமாணம் எடுத்துக்கொள்கின்றனர்.
கிதையோ திருமணம்
திருமணமான பெண் ஒருவர் தனது கணவன் வீட்டாருடனான உறவை முறித்துக் கொண்டு வேறொருவரை மணந்து கொள்வதை குறிப்பிடுகின்றனர்.
ஹார் திருமணம்
தனது குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல் பெண் ஒருவர் ஆணை திருமணம் செய்வதே.