விமான நிலையத்தில் மகிழ்ச்சியாக பணியாற்றிய பெண்! நொடியில் நடந்த சோகத்தால் பிரிந்த உயிர்
அமெரிக்காவில் விமான நிலைய பணியாளர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிகாரிகளை கண்ணீர் சிந்த வைத்திருக்கிறது.
விமான நிலைய பணியாளர்
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் அமைந்துள்ள நியூ ஆர்லியன்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் பொருட்களை பேக்கேஜ் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த பெண் ஜெர்மானி தாம்சன்(26).
இவர் கன்சாஸில் உள்ள ஹெஸ்டன் கல்லூரி மற்றும் மிசிசிப்பியின் ஜாக்சனில் உள்ள டூகலூ கல்லூரியில் சோசியாலஜி முடித்திருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்னர் வழக்கம் போல தனது பணியில், விமான நிலையத்தில் உள்ள கன்வேயர் பெல்ட்டில் பொருட்களை எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது துரதிஷ்டவசமாக அவரது தலைமுடி கன்வேயர் பெல்ட்டில் சிக்கியதால், தன்னை விடுவிக்க பயங்கர முயற்சி எடுத்தும் இறுதியில் பலத்த காயமடைந்துள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு பதறிப்போன அருகில் இருந்த விமான நிலைய பணியாளர்கள் அவரை மீட்டு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றும், தாம்சன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்ணீருடன் தாயார்
இதுபற்றி கண்ணீருடன் பேசிய அவரது தாயார், "என்னால் இப்போதும் கூட அவள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடைசியாக பணிக்குச் செல்லும்போது "வீட்டிற்கு வந்ததும் உன்னை சந்திக்கிறேன்" என கூறிவிட்டு சென்றார்.
GAT ஏர்லைன் கிரவுண்ட் சப்போர்ட் நிறுவனத்தின் CEO பெண்ணின் மரணத்தைக் குறித்து கூறுகையில், எங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்று நாங்கள் நொருங்கிப் போயுள்ளோம்.
அவருடைய குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
சரியான பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காததே இந்த விபத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.