பேஸ்புக் காதலனுக்காக இந்தியா வந்த ஸ்வீடன் நாட்டு இளம் பெண்! ஆடிப் போன நெட்டிசன்கள்
பேஸ்புக்கில் பழகிய காதலனுக்காக சுவீடனில் இருந்து இந்தியா வருகை தந்து, திருமணம் செய்துக் கொண்ட மணப்பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பேஸ்புக் மலர்ந்த காதல்
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிறிஸ்டன் லிபர்ட்(Christen Liebert) என்ற பெண், இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பவன் குமார் என்பவரிடம் கடந்த 2012ம் ஆண்டு நண்பராகிய பேசத் தொடங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக நல்ல நண்பர்களாக இருந்து வந்துள்ளார்கள். காலப்போக்கில் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது.
இவர்களின் காதல் திருமணத்தில் முடிய வேண்டும் என்ற எண்ணத்தில் இவர்கள் திருமணம் செய்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார்கள். இதனால் கிறிஸ்டன் லிபர்ட் தன்னுடை நாட்டை விட்டு பவனை தேடி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
இதனை தெரிந்து கொண்ட பவனின் பெற்றோர்கள் இருவரின் திருமணத்திற்கு சம்பதம் தெரிவித்து திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
பெற்றோர்களின் சம்பதத்துடன் திருமணம்
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை உத்திரபிரதேச மாநிலத்தின் எட்டாவில் உள்ள ஒரு பள்ளியில் இந்து மத முறைப்படி ஊர் மக்கள் மற்றும் பெற்றோர்கள் முன்பு இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்கள்.
இந்த திருமணம் குறித்து பவனின் பெற்றோரிடம் பலர் கேள்வியெழுப்பினார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக “குழந்தைகளின் சந்தோசம் தான் முக்கியம் ” என பவனின் அப்பா தெரிவித்துள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதனை பார்த்த நெட்டிசன்கள்: காதல் உண்மையாக இருந்தாலும் எப்போது வேணும்னாலும் கைகூடும் என நெகிழ்ச்சியையும் பெண்ணின் தைரியத்தை பாராட்டியுள்ளார்கள்.
UP : एटा के लड़के को हुआ स्वीडन की लड़की से प्यार, दोनों ने की शादी
— News24 (@news24tvchannel) January 29, 2023
◆ फेसबुक पर हुई थी दोस्ती pic.twitter.com/7AmfQXOGNd