தெரியாமல் வந்து சிக்கிய திருடர்கள்... சிங்கிளாக தெறிக்கவிட்ட சிங்கப்பெண்
பாட்டியின் கம்மலை பறித்துக் கொண்ட திருடர்களை பிடித்து இளம்பெண் ஒருவர் நகையை மீட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சிங்கப்பெண்ணாக மாறி நகையை மீட்ட பெண்
இந்திய மாநிலமான உத்திரபிரதேசத்தில் மீரட் பகுதியில் பாட்டியுடன் பேத்தி ஒருவர் சாலையில் நடந்து வந்து கொண்டுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பாட்டி அணிந்திருந்த கம்மலை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.
உடனே நொடியும் தாமதிக்காத குறித்த இளம்பெண், இளைஞர்களை வாகனத்துடன் கீழே விழ வைத்து, திருடர்களிடம் போராடியுள்ளார்.
இறுதியில் திருடர்கள் வாகனத்தில் தப்பிக்க நினைத்த தருணத்திலும் விடாமல் போராடிய இளம்பெண் இறுதியாக தனது பாட்டியின் கம்மலை குறித்த திருடர்களிடமிருந்து மீட்டுள்ளார்.
இளம்பெண்ணின் வீர காட்சி சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது.