இணையத்தை தெறிக்கவிடும் சிறுமியின் நடனம்... வைரல் காணொளி இதோ
இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.
சமீபத்தில் அற்புதமாக நடனமாடும் ஒரு சிறுமியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்த வீடியொவில் சிறுமி ஆடும் ஆட்டத்தை பார்த்து இணையவாசிகள் வெகுவாக அவரை புகழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் வெளியான இந்தி படமான "ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி" திரைப்படத்தின் "வாட் ஜும்கா" பாடலுக்கு இந்த சிறுமி மிக அசத்தலாக நடனமாடுகிறார்.
இணையத்தில் அவ்வப்போது சில பாடல்களும், விஷயங்களும் டிடெண்ட் ஆவது வழக்கம். அந்த வகையில் இந்த பாடல் இப்போது டிரெண்டாகி வருகின்றது. இந்த ட்ரெண்ட் இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் ஹிட் ஆகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.