தினமும் ஒரு கிளாஸ் இஞ்சி சாறு குடித்தால் உடலில் ஏற்படும் மாற்றம் என்ன?
நாம் அன்றாடம் ஒரு கிளாஸ் இஞ்சி சாறை குடிப்பதால் உடலில் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக மருத்துவர் கூறுவதை இந்த பதிவில் மிகவும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
இஞ்சி சாறு
ஆரோக்கியமாக வாழ ஆசைப்பட்டால் நாம் தினமும் இஞ்சி சாறு நமது உணவுடன் இணைவது அவசியமாக பார்க்கப்படுகிறது. இஞ்சி சாறு பருகுவதால் நமக்கு பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.
அவற்றில் வளர்ச்சிதை மாற்ற அதிகரிப்பு மூலமாக உடல் எடை இழப்பு குறிப்பிடத்தக்க பலனாக கருதப்படுகிறது.
இஞ்சியில் காணப்படும் ஜிஞ்சரால் மற்றும் ஷோகவோல் போன்ற ஆக்டிவ் காம்பவுண்டுகள் அதன் தனித்துவமான சுவை மற்றும் பல்வேறு ஆரோக்கிய பலன்களுக்கு காரணமாக அமைகின்றது.
இந்த இஞ்சி சாறில் இருக்கும் சத்துக்கள் கெட்ட கொலஸ்ரால் கரைக்கப்படுவதால் உடல் எடை சீராக பராமரிக்கப்டுகிறது. வயிறு நிரம்பிய உணர்வை அளித்து பசியை கட்டுப்படுத்தும் தன்மை இஞ்சிக்கு உண்டு.
நாம் சாப்பிடும் உணவை சரியான முறையில் செயல்முறைப்படுத்தி, ஊட்டச்சத்துக்கள் ஒழுங்காக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதே சிறந்த செரிமானம் என்று அழைக்கப்படுகிறது.
இதற்கு இஞ்சி சிறந்த மருந்து.இதிலுள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நோய் எதிர்ப்பு அமைப்பை ஊக்கப்படுத்தி தொற்றுகளுக்கு எதிராக அதன் போராட்டத்தை விரைவுப்படுத்துகிறது.
பயோஆக்டிவ் காம்பவுண்டுகள் மூளையில் வீக்கத்தை குறைக்கும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல் திறனை மேம்படுத்துவதாக ஒரு சில ஆய்வுகள் பரிந்துரை செய்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |