எப்பொழுதும் ஸ்லிம்மா இருக்க நினைக்கிறீர்களா? ஆரோக்கியமான இந்த ஒரு பானம் போதும்
இன்று உடல் எடை அனைவருக்கு பெரிய பிரச்சனையாக மாறிவரும் நிலையில், அதனை குறைப்பதற்கு பலரும் டயட் மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வாறு டயட் மேற்கொண்டு உடல் பல தொந்தரவினை சந்திக்க நேரிடும் தற்போதைய சூழ்நிலையில், உடல் எடையை குறைக்க இந்த பானத்தினை(டிடாக்ஸ் தண்ணீர்) மட்டும் தினசரி அருந்தினாலே போதும்.
இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த நீரை பருகுவது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை வெளியேற்றும் என்கின்றனர் மருத்துவர்கள். இதனை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சுத்தமான ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஒரு எலுமிச்சையை வட்டமாக வெட்டி போட வேண்டும். பின்பு புதினா இலைகள் ஒரு கை அளவும், ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சிறிதாக வெட்டி தண்ணீரில் போட வேண்டும்.
இவ்வாறு அனைத்தையும் சேர்த்துவிட்டு, ஒரு தட்டு வைத்து 4 முதல் 5 மணிநேரம் மூடிவைத்து விடவும். தற்போது இந்த நீரை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால், உடல் எடை குறைவதுடன், உடம்பில் உள்ள பித்தத்தை குறைத்து, தேவையற்ற கொழுப்புகளையும் கரைத்து நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
