வயிற்றை சுற்றி இருக்கும் கொழுப்பினால் அவதியா? இஞ்சியை இப்படி பயன்படுத்தினால் போதும்
பல மருத்துவ குணங்கள் அடங்கிய இஞ்சி உடல் எடையை குறைக்கவும், வயிற்றினைச் சுற்றி இருக்கும் கொழுப்பினை கரைக்கவும் அதிகமாக உதவி செய்கின்றது.
வயிற்றில் சதை அதிகமாவதால் தொப்பை ஏற்படுவதுடன், இதயநோய் ஆபத்தும் ஏற்படுகின்றது. தொப்பை இருக்கும் சிலருக்கு குறட்டை அதிகம் ஏற்படும்.
பெண்களுக்கு அதிகமாக இந்த வயிற்று சதை பிரச்சனை இருக்கிறது. குழந்தையின்மைக்கு ஒரு காரணமாக கருதப்படும் தொப்பையைக் குறைக்க இஞ்சி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டாகும்.
இஞ்சி சாறு
500 கிராம் இஞ்சியை தோல் நீக்கி இடித்து சாறு பிழிந்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க வைத்து, சிறிது வற்றியதும் இறக்கிவிடவும்.
இஞ்சி சாறு எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவுக்கு தேன் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் சிறிது நேரம் வைத்து கொதிக்க வைத்து இறக்கவும்.
சாப்பிடும் முறை:
காலை சாப்பாட்டுக்கு அரைமணி நேரத்துக்கு முன்பும், மாலை 6 மணிக்கும் ஒரு மேசைக்கரண்டி அளவு 40 நாட்கள் தொடர்ந்து உட்கொண்டால் தொப்பை குறையும்.
அத்துடன் உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் அவசியம். பகல் தூக்கத்தை தவிர்ப்பது நல்லது.
நான்கு டீஸ்பூன் அளவுள்ள இஞ்சி சாறுடன் சிறுது உப்பு மற்றும் சில துளிகள் எலுமிச்சம் சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து அருந்துவது இஞ்சி ஜூஸ் ஆகும். இது மஞ்சள் காமாலை, ஆஸ்துமா, சளி இவற்றை நீக்க வல்லது.