காரசாரமான இஞ்சி சட்னி! இனிமேல் இப்படி செய்து பாருங்க
இஞ்சி என்றால் எல்லோருக்கும் தெரியும் இது மருத்துவ குணம் கொண்ட ஒரு கிழங்கு வகையாகும். சளி, இருமல், தும்மல் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம்.
அதில் தேனீர் வகைகளும் செய்யலாம். ஆனால் இன்றைய புட் ரெசிபியாக உங்களுக்கு தரப்போவது இஞ்சி சட்னி. இஞ்சியை வைத்து ஒரு சுவையான சட்டினி எப்படி செய்யலாம் ன்பதை இந்த பதிவில் பாாக்கலாம்.
இது சுவைக்கு மட்டுமல்லாமல் நமது உடலில் இருக்கும் பல நோய்களையும் குணப்படுத்த கூடிய ஒரு உணவாகும்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய் - 1 தேக்கரண்டி
- இஞ்சி - அரை கப்
- வெங்காயம் - அரை கப்
- பச்ச மிளகாய் - 6
- காய்ந்த மிளகாய் -6
- புளி - 2 துண்டு
- துருவிய தேங்காய் - அரை கப்
- கொத்தமல்லி - அரை கப்
- உப்பு - 1 தேக்கரண்டி
- எண்ணெய் - 1 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
- சீரகம் - கால் தேக்கரண்டி
- கடுகு - கால் தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 1
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- கறிவேப்பிலை
செய்யும் முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அது சூடாகியதும் இஞ்சி ,வெங்காயம், பச்ச மிளகாய், காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக தாளித்து கொள்ளவும்.
பின்னர் இதில் கொஞ்சம் புளி, துருவிய தேங்காய், கொத்தமல்லி, மற்றும் உப்பு சேர்த்து தாளித்து எடுத்து கொள்ளவும். பின்னர் இதை எடுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாழித்து அரைத்து வைத்த சட்டினியில் சேர்த்து கொள்ளவும். இவ்வாறு செய்யதால் இஞ்சி சட்னி தயார்.