பூனைக்கு CFO பதவி! பலரது கவனத்தை ஈர்த்த சம்பவம்
Chief Feline Officer Cat Mumbai Metro: மும்பை மெட்ரோவின் 7வது வழிதடத்தில் குண்டவாலி மெட்ரோ நிலைய நுழைவாயிலில் பூனைக்கு CFO கௌரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.
பூனைக்கு CFO கௌரவ பதவி
கடந்த பல மாதங்களாக நுழைவாயிலில் அமர்ந்துள்ள பூனை பலருக்கும் பரீட்சியமாகிவிட்டன. இதன் அமைதியான தோற்றம் காரணமாக பலரும் அதை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட வைரலானது.
இந்நிலையில் சந்தேஷ் சாமந்த் என்பவர் பூனையை படமெடுத்து மெட்ரோ நிர்வாகத்திடம், ”அன்பான உயிருக்கு பதவியை வழங்குங்கள் என்றும் ஊதியம் இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும்” குறிப்பிட்டார்.

மெட்ரோ நிர்வாகம் பதிவு
இதனை ஏற்றுக்கொண்ட மும்பை மெட்ரோ நிர்வாகம் பூனைக்கு CFO பதவியை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. மேலும் நிலையத்தை ஆய்வு செய்வது, பயணிகளை கண்காணிப்பது போன்ற பொறுப்புகள் அளிக்கப்படுவதாகவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
