வயிற்றில் உள்ள கெட்ட கழிவுகளை நீக்க வேண்டுமா? இதோ இயற்கை வழியில் சில டிப்ஸ்
நம் உடலின் ஆரோக்கியத்திற்கு வயிற்றில் உள்ள திசுக்கள் முக்கிய பங்காற்றுகின்றன. நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், வயிற்றுப் பகுதியில் இருக்கும் குடல்கள் சரியாக வேலை செய்ய வேண்டும்.
அப்போதுதான் குடல்கள் மூலம் நாம் சாப்பிடும் உணவுகளின் கழிவுகள் நல்லமுறையில் வெளியே உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும். ஆனால், வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டால் அது செரிமானத்தை பாதித்துவிடும்.
நாம் ஆரோக்கியமாக வாழ, வயிற்றில் உள்ள கழிவுகளை எப்படி நீக்கலாம் என்று பார்ப்போம் -
கற்றாழை
கற்றாழையில் மாபெரும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. பல நூற்றாண்டு காலமாக வயிற்றில் ஏற்படும் பிரச்சினைக்கு கற்றாழை மருந்தாக அமைகிறது.
காற்றாழையில் உள்ள ஜெல்லை நாம் சாப்பிடும்போது அது வயிற்றில் உள்ள சேதமடைந்த திசுவை குணப்படுத்தி, கழிவுகளை வெளியேற்ற உதவி செய்யும். மேலும் வயிற்று எரிச்சலை போக்கி உடலுக்கு குளுமையை கொடுக்கும்.
கெமோமில் டீ
வயிற்றில் எந்த பிரச்சினை வந்தாலும் கெமோமில் டீ அற்புதமாக தீர்வு கொடுக்கும். சூடான நீரில், கெமோமில் பூக்களை போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து குடித்து வந்தால், வயிற்று எரிச்சல், அசௌகரியத்தை போக்கும். ஒவ்வாமை, வயிற்றின் உள்பகுதியில் ஏற்படும் வீக்கத்தை போக்கும்.
இஞ்சி
இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இஞ்சி சேர்க்கப்பட்ட உணவையோ, இஞ்சி தேநீரையோ தினமும் உட்கொண்டு வந்தால் குமட்டல், வயிற்றில் ஏற்படும் புண்களை குணப்படுத்தும். குடல் நோய்களை போக்கும்.
தயிர்
தொடர்ந்து தயிர் சாப்பிட்டு வந்தால் முகம் பளபளப்பாக மாறுவதோடு அல்லாமல் உடல் ஆரோக்கியமும் பெறலாம். கடுமையான வயிற்றுப் பிரச்சினைகளுக்கு தயிர் போன்ற புரோபயாடிக் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வரலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |