கில்லி பட வில்லனின் மனைவியா இது? வைரல் புகைப்படம்
விஜய் படத்தில் வில்லனுக்கு துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கராத்தே ராஜாவின் மனைவி புகைப்படம் வைரலாகி வருகின்றது.
கராத்தே ராஜா
விஜய், கமல்ஹாசன் படங்களில் வில்லன்களுக்கு துணை கதாபாத்திரமாக நடித்தவர் தான் கராத்தே ராஜா. பொதுவாக வில்லன்கள் மட்டும் தான் ரசிகர்கள் ஞாபகத்தில் இருப்பார்கள்.
அவர்களுடன் துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் அவ்வளவாக ஞாபகத்தில் இருப்பதில்லை. ஆனால் கராத்தே ராஜாவை பார்த்தால் வில்லன் என்று மக்கள் கூறும் அளவிற்கு ஞாபகத்தில் இருக்கின்றார்.
தனக்கு கொடுக்கும் கதாபாத்திரத்தினை கச்சிதமாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் என்று கூறலாம். கராத்தே ராஜா சினிமாவிற்கு வரும் முன்பு பள்ளிகளில் கராத்தே வகுப்பு ஒன்று நடத்திவந்துள்ளார்.
பின்பு சினிமா வாய்ப்பிற்காக அந்த கராத்தே பயிற்சியை விட்டுவிட்டு சென்னைக்கு வந்துள்ளார். 2004ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான விருமாண்டி படத்தில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து கில்லி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், போக்கிரி போன்ற படங்களில் நடித்து அசத்தினார். இவர் 2009ம் ஆண்டு திவ்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |