பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்திய ராட்சச சிலந்தி வலைகள்- இணையத்தில் வைரல்!
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கடந்த சில வாரங்களாகவே கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.
இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தற்போது அந்த பகுதிகளில் வெள்ளங்கள் முற்றிலும் வடிந்த நிலையில் அப்பகுதி மக்களை மற்றொரு அச்சம் சூழ்ந்துள்ளது.
இந்தச் சூழலில் விக்டோரியா மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கிப்ஸ்லேண்ட் நகரவாசிகளை அப்பகுதி சிலந்திகள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
அந்நகரின் சாலைப் பகுதி ஓரங்களில் சிலந்திகள் பல மீட்டர்களுக்கு ராட்சச வலைகளைப் பின்னியுள்ளதே காரணம். புல்வெளிகள் மட்டுமின்றி செடி, கொடி, மரம், மின் கம்பங்கள் என பார்க்கும் திசையெல்லாம் வெள்ளை நிற சிலந்தி வலையால் மூடப்பட்டுள்ளது.
பார்க்க இவைகள் அழகாக இருந்தாலும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியதையும் மறுப்பதற்கில்லை. இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கையில், “வெள்ளத்தில் சிலந்திகள் சிக்கிவிடாமல் இருக்க சாலை மீது தங்களது வலைகளைப் பின்னியுள்ளன.
இந்த வலைகள் ஒரு ராட்சச வெண்மை நிறப் புல்வெளி போன்று படர்ந்து காணப்படுகிறது. இத்தகைய சிலந்திகள் மனிதர்களுக்கு ஆபத்து எதையும் விளைவிக்காது.
எனினும் ஒவ்வாமை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், இந்த சிலந்தி வலைகளைக் குறிப்பிட்டு ஆஸ்திரேலிய நெட்டிசன்கள் தங்கள் சமூக வலைதளங்களில் நகைச்சுவையாகப் பதிவிட்டு வருகின்றனர் .
#WATCH | Massive spider web blankets Australia’s bushland after heavy rains in the region. Visuals from Gippsland, Victoria.
— ANI (@ANI) June 17, 2021
(Source: Reuters) pic.twitter.com/3jGwARkHHk