தண்ணீரில் பாம்புகளின் அசத்தலான காதல் நடனம்: அரிய காட்சி இதோ
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன. அதன்படி சமீப காலமாக பாம்புகளின் (Snake) வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போது ஒரு வித்தியாசமான வீடியோ வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவில் ஒரு ஆண் பாம்பு மற்றும் ஒரு பெண் பாம்பைப் பற்றியது. இதில் இந்த இரண்டு பாம்புகளும் தண்ணீரில் காதல் செய்வதை காணலாம். இந்த அற்புதக் காட்சியை அங்கிருந்த ஒருவர் தனது கேமராவில் படம்பிடித்துள்ளார்.
இது சமூக வலைதளங்களில் வெளியாகி நீண்ட நாட்களாகப் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோ இதுவரை பல்வேறு தளங்களில் மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வீடியோவுக்கு அதிக லைக்குகளை நெட்டிசன்கள் அளித்துள்ளனர். சில நொடிகளே உள்ள இந்த வீடியோ ஒரு சமவெளியில் எடுக்கப்பட்டுள்ளது.
இதில், ஆண் பாம்பு ஒரு அடி முன்னோக்கி நகர்கிறது, பின்னர் பெண் பாம்பும் அதே வேகத்தில் நீந்தி முன்னேறுகிறது. சில கணங்களுக்கு, ஒரு அழகான தருணமாக இந்த காட்சி காணப்படுகிறது. உண்மையில், இருவரும் நீந்தும்போது, இணைக்கப்பட்டு காதலிக்கத் தொடங்குகிறது. இந்த காட்சி பார்க்கத் தகுந்ததாக உள்ளது.