36 வயதில் விஜய்யின் ரீல்ஸ் தங்கைக்கு நடந்த திருமணம்
Actress Nancy Jenifer Marriage: கில்லி படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை நான்சி ஜெனிபர் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது.
நடிகை நான்சி ஜெனிபர்
நடிகர் விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் கில்லி. இப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்து வரும் நான்சி ஜெனிபர்.
36 வயதான இவர் திருமணமே வேண்டாம் என்று சிங்கிளாக வாழ்ந்து வருவதாக கூறப்பட்டு வந்தது. ஜெனிபரும் சின்ன சின்ன தொழில்கள் மூலமாக சம்பாதிக்கவும் செய்தார்.

இவர் கில்லி படத்தில் புவனா என்ற கதாபாத்தில் தளபதி விஜய் அரிசி மூட்டை என்று செல்லமாக அழைக்கும் தங்கையாக நடித்திருந்தார்.
இவர் இந்து மதத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் கிறிஸ்தவ முறைப்படி அவரது ரிசப்ஷன் நடைபெற்றது.
நான்சியின் தோழி திருமண ரிசப்ஷனில் இரவு எடுத்த காணொளி ஒன்றினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
இரண்டு முறையில் திருமணமா?
ஜெனிபரின் திருமண நிகழ்வை அவதானித்த ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கரத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் தற்போது முதலமைச்சராக இருக்கும் விஜய் தனது ரீல்ஸ் தங்கைக்கு வாழ்த்து கூறுவாரா என்ற கேள்வியும் எழுந்து வருகின்றது.
ஜெனிபர் கிறிஸ்தவர் என்பதால் கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றிக் கொண்டு கேக் வெட்டியுள்ளார். மறுநாள் காலையில் இந்து முறைப்படி கார்த்திக் நான் கழுத்தில் தாலி கட்டியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்திருப்பார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். விண்ணைத்தாண்டி வருவாயா படம் பார்த்தது போன்று இருப்பதாக கருத்துக்கள் குவிந்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |