செல்லும் வழியில் கிடக்கும் பணத்தினை எடுக்கலாமா? அது நல்லதா? பலரின் கேள்விக்கு பதில்
சில தருணங்களில் சாலையில் நாம் நடந்து செல்லும் போது கீழே பணம் விழுந்து கிடப்பதை அவதானித்திருப்போம். இவ்வாறு கீழே கிடக்கும் பணத்தினை எடுக்கலாமா? அவ்வாறு எடுத்தால் என்னென்ன பலன்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கீழே கிடக்கும் பணத்தை எடுக்கலாமா?
சாலையில் விழுந்து கிடக்கும் பணத்தினை நீங்கள் கண்டால் விரைவில் உங்களுக்கு புதிய வேலை கிடைப்பதுடன், வேலையில் முன்னேற்றம் மற்றும் பணவரவு ஏற்படும்.
இதுவே நாணயம் சாலையில் விழுந்து கிடப்பதை பார்த்தால் இவையும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்திற்கான அடையாளமாம்.
வழியில் கிடக்கும் நாணயம் நேர்மறை ஆற்றலை குறிப்பதுடன், வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றது.
மேலும் சாலையில் நடந்து செல்கையில், பர்ஸ் அல்லது பணப்பை கிடப்பதை பார்த்தால், நீங்கள் பூர்வீக சொத்துக்கு சொந்தமாகப் போகிறீர்கள் என்று அர்த்தமாம்.
கீழே நாணத்தினை கண்டால் கடவு ஆசி கிடைப்பதுடன், அவற்றை எடுத்தால் தெய்வ ஆசி கிடைக்கும் என்பது ஐதீகமாம்.
சாலையில் கிடக்கும் பணத்தை எடுத்து பர்ஸில் வைப்பதோ அல்லது காணிக்கையாக கொடுக்கலாம். ஆனால் ஒரு போதும் அவற்றை செலவு செய்துவிடக்கூடாதாம்.
நீங்கள் கண்டெடுக்கும் பணத்தினை உண்டியலில் போடுவதோ, ஏழைகளுக்கு தானம் கொடுப்பதோ செய்தால் மிகவும் நல்லதாம்.