Getti Melam: வீட்டு வேலை செய்யும் மனைவியை நேருக்கு நேர் சந்தித்த கணவர்! வெளியான புதிய ப்ரொமோ
கெட்டி மேளம் சீரியலில் அப்பா, அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்த துளசி அண்ணன் மற்றும் தம்பியை வீட்டைவிட்டு வெளியே அனுப்பியுள்ளார்.
கெட்டி மேளம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று கெட்டி மேளம். திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணியளவில் ஒளிபரப்பாகிவரும் நிலையில், இதற்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
குடும்பத்தின் நடக்கும் நிகழ்வுகளை அருமையாக எடுத்துக் காட்டிவரும் இந்த சீரியலின் தற்போதைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையினால் தனது மனைவி மற்றும் வளர்ப்பு மகளை அழைத்துக் கொண்டு வெளியேறினார் சிவராமன்.
இதனைக் கேள்விப்பட்ட துளசி மற்றும் அஞ்சலி இருவரும், பெற்றோரை அழைத்து வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு அப்பா அம்மாவை இருக்க வைத்துவிட்டு, அண்ணன் மற்றும் தம்பியை வீட்டை விட்டு வெளியேறக்கூறியுள்ளார்.
அண்ணனும் வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், லட்சுமி வீட்டு வேலை செய்து வருகின்றார். சிவராமன் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகின்றார்.
இருவரும் தனது வேலையில் இருக்கும் போது நேருக்கு நேர் சந்திக்கும் தருணம் தற்போது ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |