Getti Melam: சைக்கோ கணவனை அலறவிட்ட அஞ்சலி... யாரும் எதிர்பாராத திருப்பம்
கெட்டி மேளம் சீரியலில் சைக்கோ கணவரை தனது மாஸான செயலால் அஞ்சலி அலறவிட்டுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
கெட்டி மேளம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று கெட்டி மேளம். திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணியளவில் ஒளிபரப்பாகிவரும் நிலையில், இதற்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
கணவரின் சைக்கோ தனத்தினை அறியாத அஞ்சலிக்கு தற்போது அனைத்து உண்மைகளும் தெரிந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அஞ்சலி எஸ்கேப் ஆகியுள்ளார்.
அவர் தனது அம்மா வீட்டிற்கு சென்ற நிலையில், அங்கு வந்த மகேஷ் அவரை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்ததும் அஞ்சலி ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். பொருட்களை இடம் மாற்றிவைப்பது, பொருளை தூக்கி போடுவது என வில்லத்தனத்தை ஆரம்பித்துள்ளார்.

Siragadikka Aasai: அம்மா பரிமாறிய உணவு... தந்தையிடம் கூறி கண்கலங்கிய முத்து! உணர்வுப்பூர்வமான ப்ரொமோ
அஞ்சலியின் ஆட்டத்தை அவதானித்த மகேஷ் பயங்கர அதிர்ச்சியில் இருக்கின்றார். மேலும் அஞ்சலியின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |