பிரேக் அப்பிற்கு பின்பு Ex கொடுத்த பரிசுகளை வைத்திருக்கக்கூடாது... ஏன் தெரியுமா?
முன்னாள் காதலி அல்லது காதலன் கொடுத்த பரிசுகளை நாம் வைத்துக் கொள்ளக்கூடாததன் காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அன்பும் காதலும் இல்லையெனில் இந்த உலகம் என்னவாகும் என்றே தெரியாது. நம்மில் பலருக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட காதல் கதைகள் இருக்கலாம்.
காதல் என்பது பொதுவான உணர்வு ஆகும். இதில் சிலரின் காதல் திருமணத்தில் முடிந்து மகிழ்ச்சியாக வாழத் தொடங்கிவிடுவார்கள்.
ஆனால் சிலரின் காதல் தோல்வியில் முடிந்துவிடும். இவ்வாறு காதலித்த நாட்களில் காதலர்கள் பரிசுகளை பரிமாறிக்கொள்வது இயல்பான ஒன்றாகும்.
பிரிவிற்கு பின்பும் இந்த பரிசுகளை நாம் வைத்துக்கொண்டிருக்கக்கூடாது. ஏன் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பரிசுகளை ஏன் குப்பையில் போட வேண்டும்?
காதல் பிரேக் அப் ஆன பின்பு அதிலிருந்து மீண்டு வருவதும் மிகவும் கஷ்டமான நிலையாகும். இந்த தருணத்தில் அவரைப் பார்ப்பதையோ, பேசுவதையோ தவிர்ப்பதுடன், அவரை நினைவு கூறும் பரிசு பொருட்களை உங்களிடம் வைத்துக் கொண்டால், மனதை பாதிக்கக்கூடும். இது அடுத்த நிலைக்கு செல்லவிடாமல் தடுக்கும் என்பதால், அவர் சம்பந்தப்பட்ட பொருட்களை அருகிலிருந்து தூக்கிவிட வேண்டும்.
முன்னாள் காதலர் கொடுத்த பரிசுகளை கண்முன் வைத்து அவர் நினைவாக இருப்பது, மன வலியை ஏற்படுத்தும். இது பிரிவிற்கு பின்பும் மனதுக்குள் வெறுப்பு, மனக்கசப்பு இவற்றினை ஏற்படுத்தும் என்பதால், குறித்த பரிசை தூக்கி போட்டுவிட்டு, அந்த நினைவுகளுக்கு குட் பை சொல்லிவிட வேண்டும்.
பிரேக் அப்பிற்கு பின்பு தங்களை கவனித்துக் கொள்வதை பெரும்பாலும் செய்வதில்லை. இதனை கடந்து போவது கடினமானதாக தோன்றினாலும், பரிசுகளை தூக்கி போட்டு அதிலிருந்து மீண்டு வந்தால், மரியாதை உயர்வதுடன், தன்னம்பிக்கை உணர்வு அதிகரிப்பதை நீங்கள் உணர்வீர்கள்.
பிரிவிற்கு இருவரில் யார் வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். ஆனால் ஒருவர் செய்யும் தவறை கட்டாயம் மன்னிக்க வேண்டும். பரிசுகளை நாம் அப்புறப்படுத்தும் போது, அவர்கள் மீது கோபம் ஏற்படாமல் அவர்களிடையே வெறுப்பு அகன்று மன்னிக்க முடியும்.
பரிசுகளை கண்முன் வைத்துக் கொண்டிருந்தால் புதிய தொடக்கத்தை நம்மால் செய்ய முடியாது. ஆதலால் வலிகளை மறக்கவும், புதிய பயணத்தை தொடங்கவும் கட்டாயம் தேவையற்ற விடயங்களை குப்பையில் போடுவது அவசியமாகும். இவ்வாறு நீங்கள் இருந்தால் கடந்த காலத்தில் வாழாமல் நிகழ் காலத்தில் வாழ்ந்து பழகுவீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |