அத்திப்பழத்தினால் செய்யப்படும் டயட் உணவுகள்
பொதுவாக டயட் இருப்பவர்கள் அத்திப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதில் அதிகப்படியான இரும்புசத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், தயாமின், நார்சத்து, வைட்டமின் சி, ஏ, கே, ஈ, கே இருப்பதால், உடலுக்கு தேவையான சுத்தமான ஆக்சிஜன் சுழற்சியை தரும்.
டயட் இருப்பவர்கள் இந்த பழத்தை ஜுஸாகவோ அல்லது வேறு உணவாகவோ சாப்பிடலாம். அந்த வகையில் அத்திப்பழ பாதாம் அல்வா எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் பார்கலாம்.
தேவையான பொருட்கள்
- உலர்ந்த அத்திப்பழம் - 04
- பாதாம் -50 கிராம்
- நெய் -தேவையான அளவு
- பால் -1 கப்
- சர்க்கரை - 1கப்
- ஏலக்காய் தூள் -1ஸ்பூன்
செய்யும் முறை
உலர்ந்த அத்திப்பழம் மற்றும் பாதாமை பொடி போல் அரைத்துக் கொள்ளவும். நறுமணம் வரும் வரை இந்த பொடியை ஒரு கடாயில் போட்டு அடுப்பில் வைத்து நெய்யில் சமைக்கவும்.
பின்னர் இதனுடன் பால், சர்க்கரை, ஏலக்காய் தூள் கலந்து அல்வா பதம் வரும் வரை கிண்டவும். அதன் பின் சூடான அல்வா மேல் சில நட்ஸ்களை தூவி ஒரு கோப்பையில் இட்டு அரை மணி நேரம் வரை ஆற விட்டு பரிமாறவும். சுவையான அத்திப்பழ பாதாம் அல்வா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |