மேடையில் ஜெனிலியா, ரவிமோகன் ரொமாண்டிக் காட்சி.. கெனிஷா கொடுத்த ரியாக்ஷன்
நடிகர் ரவி மோகன் புதிய ஸ்டுடியோ அறிமுக விழா நடத்தியுள்ள இதில் ஜெனிலியா கலந்து கொண்டு பேசியுள்ளதுடன், தனது நடிப்பினையும் வெளிக்காட்டியுள்ளார்.
நடிகர் ரவி மோகன்
2003ம் ஆண்டில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி உச்ச நடிகராக வலம் வருகின்றார்.
இவர் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் இருக்கின்றனர்.
தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரவிமோகன், ஆர்த்தி இருவரும் பிரிந்துள்ள நிலையில், பாடகி கெனிஷா உடன் வெளியிடங்களுக்கு செல்வது சர்ச்சையை ஏற்படுத்தியது.
புதிய ஸ்டுடியோ
இந்நிலையில் ரவிமோகனின் சொத்துக்கள் முடக்கப்படுவதாகவும் தகவல் வெளியான நிலையில், தற்போது புதிய ஸ்டுடியோ ஒன்றினை திறப்பதற்கு விழா எடுத்துள்ளார்.
இதில் தனது சினிமா நண்பர்கள், தன்னுடன் நடித்த நடிகைகள், உறவினர்கள் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த 2008ம் ஆண்டு வெளியான சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ரவிமோகனுக்கு ஜோடியாக நடித்த ஜெனிலியா பேசும் போது ரவிமோகன் கண்கலங்கியுள்ளார்.
அவரது கணவரும் ரவி மோகனை வாழ்த்தி பேசியுள்ளார். மேலும் ஜெனிலியா இப்படத்தில் வந்த காட்சி சிலவற்றிறை மேடையில் ரீ-கிரியேட் செய்து அசத்தியுள்ளனர்.
மேடையில் நடைபெற்ற இருவரின் ரொமான்ஸ் காட்சியினை பாடகி கெனிஷா மகிழ்ச்சியாக பார்த்து ரசித்துள்ளார்.
குறித்த படம் தற்போது 17 ஆண்டுகள் ஆகியுள்ள இக்காட்சியினை அவதானித்த ரசிகர்களும் மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.
#RaviMohan & #Genelia recreating the iconic scene of SanthoshSubramaniam♥️😅 pic.twitter.com/EFR8MkJqCC
— Ayyappan (@Ayyappan_1504) August 26, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
