Gelatin எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
விலங்குளின் கொலாஜனில் இருந்து பெறப்படும் புரோட்டீனே Gelatin ஆகும், கொலாஜன் மாடுகள் மற்றும் பன்றிகளில் இருந்து பெறப்படுகிறது.
Gelatin னை கொண்டு மாத்திரைகள், அழகு சாதன பொருட்கள், உணவுகள் மற்றும் களிம்புகள் தயாரிக்கப்படுகிறது.
என்றென்றும் இளமைக்கு, கீல்வாதம், உடையக்கூடிய நகங்கள், உடற்பருமன், osteoporosis போன்றவற்றிக்கு Gelatin பயன்படுத்தப்படுகிறது.
பக்கவிளைவுகள்
- தொண்டை புண், எரிச்சல்
- வாயில் புண்
உணவுடன் மட்டுமே எடுத்துக்கொள்ளலாம், தினமும் 15 கிராமுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது பக்கவிளைவுகள் தீவிரமாகக்கூடும்.
விலங்குகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருள் என்பதால் நோய்வாய்ப்பட்ட விலங்குகளாக இருந்தால் மனிதரையும் பாதிக்க வாய்ப்புகள் அதிகமுண்டு.
புரோட்டீன் அதிகம் நிறைந்த Gelatinயை கர்ப்பிணிகள், தாய்ப்பாலுட்டும் பெண்கள், குழந்தைகளுக்கு மருத்துவரின் முறையான ஆலோசனைகள் இல்லாமல் பயன்படுத்த வேண்டாம்.
முடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், சீரான உடல் எடை குறைப்பிற்கும், நிம்மதியான உறக்கத்திற்கும், எலும்புகள் வலுவடையவும், செரிமானத்திற்கும், வயதாதலை தடுக்கும் Gelatin பயன்படுத்தப்படுகிறது.