குடிபோதையில் அஜித் பட நடிகை செய்த அலப்பறை- இணையத்தில் கசிந்த காணொளி
குடிபோதையில் அஜித் பட நடிகை செய்த அலப்பறை காணொளியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரியா பிரகாஷ் வாரியர்
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானர் பிரியா பிரகாஷ் வாரியர்.
இவர், இந்த திரைப்படத்தில் புருவத்தை தூக்கியபடி கைகளை துப்பாக்கி போன்று செய்து சுடும் காட்சியால் சமூக வலைதளங்களில் பிரபலமானார்.
இதனை தொடர்ந்து பிரியா பிரகாஷ் வாரியருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். முதல் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், பல்வேறு பட வாய்ப்புகளும் அவருக்கு வந்தன.
அதே சமயம், பாலிவுட் நடிகர்களைப் பின்னுக்கு தள்ளும் அளவுக்கு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பல லட்சம் பேர் பின்தொடர ஆரம்பித்தார்கள்.
குடிப்போதையில் செய்த அலப்பறை
இந்த நிலையில், இதுவரையில் பிரியா பிரகாஷ் வாரியர், ஒரு சில படங்களில் மாத்திரம் நடித்திருந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது அவர் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்வது வழக்கம்.
அந்த வகையில், கடந்த ஏப்ரல் 10 அன்று அஜித் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா நடித்திருப்பார்.
அதில், 90களில் சிம்ரன் ஆடிய ஹிட் பாடலான “தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா..” என்ற பாடலுக்கு GBU படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் நடனமாடினார். நடிகை சிம்ரனின் நடனத்தை அப்படியே ரீகிரியேட் செய்திருப்பதாக ரசிகர்கள் பலரும் பிரியா பிரகாஷ் வாரியரை பாராட்டி வருகின்றனர்.
பலரும் அந்த பாடலை கட் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் பிரியா பிரகாஷ் வாரியர் மீண்டும் ட்ரெண்டாகி வருகிறார்.
இப்படியொரு சமயத்தில், நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் குடிப்போதையில் உலறிக் கொட்டிய காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதனை பார்த்த இணையவாசிகள் இணையத்தில் வைரலாக்கி, பிரியா வாரியர் பற்றிய தவறான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
