பிக்பாஸிற்கு வரவில்லை! கையை விரித்த பிரபலம்: கடும் அப்செட்டில் பிரபல ரிவி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் ப்ரொமோ வெளியாகி ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.
இந்த முறை பிக்பாஸ் லோகோ ரசிகர்களை கவரவில்லை எனவும் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன.
பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்பு ஒருவழியாக வேலையைத் தொடங்கிய பிரபல ரிவி, இந்த சீசனில் தனது பிரபலங்களை ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
காரணம், கடந்த சீசனில் பிரபல ரிவி பிரபலங்கள் இடம்பெற்றதால் குறித்த நிகழ்ச்சி சுவாரசியமில்லாமல் மக்களிடம் வரவேற்பை பெறாமல் போயுள்ளதோடு, முன்பு நடந்த சீசனை விட கடந்த சீசனில் டிஆர்பி குறைந்துவிடடதாம்.
இதனால் இந்த சீசனில் யூடியூப் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என வேறு பாதையில் பயணம் செய்து பல்வேறு போட்டியாளர்களை தெரிவு செய்துள்ள நிலையில், நேற்றைய தினத்தில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதனால் யூடியூப் பிரபலம் ஜி பி முத்து பிக்பாஸ் செல்கின்றார் என்று உறுதியாக கூறப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் முத்து பிக்பாஸிலிருந்து விலகியுள்ளதாகவும், பிரபல ரிவி கடும் அப்செட்டில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜி பி முத்து தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருவதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.