லியோ பாடலுக்கு இளம்பெண்ணுடன் குத்தாட்டம் போட்ட பிரபல இயக்குநர்.. மிரட்டல் லுக்கில் வெளியான காட்சி!
லியோ திரைப்படத்தில் “நான் ரெடி..” பாடலுக்கு இயக்குநர் கெளதம் மேனன் நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
லியோ திரைப்படம்
விஜய் நடிப்பிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் இன்றைய தினம் உலகெங்கும் திரைக்கு வரவிருக்கின்றது.
இந்த திரைப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், உள்ளிட்டவர்கள் நடித்துள்ளதுடன் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
லியோ திரைப்படத்தில் இதுவரை மூன்று பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. இதில் முதலில் வெளியான நான் ரெடி தான் பாடல் சாதனை படைக்கும் அளவிற்கு வைரலாகி வருகின்றது.
பப்ளிக்காக குத்தாட்டம்
இந்த நிலையில் லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கௌதம் மேனன் பப்ளிக்காக இளம் பெண்ணுடன் “ நா ரெடி தான்..” பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
வீடியோக்காட்சியில் பார்ப்பதற்கு இளம்பெண்ணின் முகம் சரியாக காண முடியவில்லை. ஆனால் இயக்குநர் பெண்ணின் தோலில் கை போடுவதற்கு முயற்சிக்கிறார் போல் தெரிகின்றது.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அத்துடன் வீடியோக்காட்சியை பார்த்த இணையவாசிகள், “ கௌதம் மேனனா இது?” என அதிர்ச்சியான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
leo first day booked pic.twitter.com/k6713avqXe
— pree (@preethhiiii) October 16, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |