அம்மாவின் தங்கையை திருமணம் செய்தது தான் பிரிவிற்கு காரணம்: மனம் திறந்த நவரச நாயகனின் மகன்
தனது தாய் தந்தையரின் பிரிவு குறித்து முதன்முறையாக மனம் திறந்திருக்கிறார் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்.
கௌதம் கார்த்திக்
தமிழ் சினிமாவில் நவரச நாயகனாக அறியப்படும் கார்த்திக்கின் மகன் தான் கௌதம் கார்த்திக். இவர் கடல் திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து, ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜா வை’, ‘ரங்கூன்’, ‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘தேவராட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த ஆண்டு நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
பெற்றோரின் விவாகரத்து
இந்நிலையில், தனது தந்தையின் விவாகரத்து குறித்து பேட்டி ஒன்றில் ஓபனாக பேசியிருக்கிறார்.
தமிழில் அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். அதன்பின் பல படங்களை தெரிவு செய்து நடித்து நவரச நாயகன் என்ற பெயரையும் பெற்றார்.
அதன் பின் 1988ஆம் ஆண்டு சோலைக்குயில் திரைப்படத்தில் தன்னுடன் நடித்த நடிகை ராகிணியை திருமணம் செய்துக்கொண்டார். அதில் கார்த்திக்-ராகிணி தம்பதிகளுக்கு பிறந்தவர்கள் தான் கௌதம் கார்த்திக், கையன் கார்த்திக்.
இதன்பின் 1992ஆம் ஆண்டு ராகினியின் தங்கையான ரதியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு திரன் கார்த்திக் என்ற மகன் இருக்கிறார்.
தனது தந்தை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டதால் நான் அதிகம் தனிமையில் வாடியதாகவும் அப்பா சென்னையில் இருந்ததால் தான் அம்மாவிடம் தான் வளர்ந்தேன் எனவும் அம்மா ஒரு சிங்கிள் மதராக என்னையும் தம்பியையும் வளர்த்தார்.
மேலும், அப்பாவிடமிருந்து இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தான் போன் வரும் எப்போதாவது தான் தன்னை வந்து பார்ப்பார் எனவும் அம்மா தான் சிரமபட்டு வளர்த்தார் எனவும் உருக்கமாக சொல்லியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |