கெளதம் கார்த்திக்கிற்கு விரைவில் திருமணம் - காதலை உறுதி செய்த ஜோடி
நடிகர் கெளதம் கார்த்திக் தனது சமூக வலைத்தளத்தில் சற்று முன் மஞ்சிமா மோகனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகரான கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் செம ரொமான்ஸ் ஆக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருவரும் காதலிப்பதை உறுதி செய்துள்ளனர்.
விரைவில் திருமணம்
இந்த நிலையில் காதல் ஜோடிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சினிமா உலகில் சூர்யா-ஜோதிகா, பிரசன்னா- சினேகா உள்பட தமிழ் திரையுலகில் பல நட்சத்திர ஜோடிகள் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
தற்போது அந்த பட்டியலில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் விரைவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.