54 வயதில் மகளுக்கு போட்டியாக மாடர்ன் உடையில் கௌதமி!
நடிகை கௌதமி மகளுக்கு போட்டியாக மாடர்ன் உடையணிந்து 54 வயதில் இளமையாக காணப்படும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
கௌதமி
தெலுங்கு திரையுலகில் முதலில் நடிகையாக அறிமுகமான நடிகை கௌதமி. பின்னர் தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார்.
இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. கடந்த 1998ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்ட கௌதமிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பின்பு திருமணமான ஒரே வருடத்தில் கணவரை விவாகரத்தும் செய்தார்.
அதன் பின்பு 2004ம் ஆண்டிலிருந்து நடிகர் கமலஹாசனுடன் வாழ்ந்து வந்த கௌதமி 12 ஆண்டுகளுக்கு பின்பு கடந்த 2014ம் ஆண்டு அவரையும் விட்டு பிரிந்தார்.
மகள் சுப்பலக்ஷ்மியுடன் கௌதமி
தற்போது தனது மகள் சுப்புலட்சுமியுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். மகள் சுப்புலஷ்மிக்கு தற்போது 24 வயதாகும் நிலையில், அம்மாவின் அழகை அப்படியே மெருகேற்றி வருகின்றார்.
இந்நிலையில் தனது மகள் சுப்புலட்சுமியுடன் இருக்கும் புகைப்படங்களை கௌதமி அவ்வப்போது வெளியிட்டு வரும் நிலையில், தற்போதும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
ஆம் 54 வயதில் மகளுக்கு போட்டியாக மாடர்ன் உடையில் இளமையாக காணப்படும் கௌதமியை ரசிகர்கள் பாராட்டி வருவதுடன், புகைப்படத்திற்கு கருத்தும் தெரிவித்து வருகின்றனர்.