ஒரு நாளைக்கு 1002 கோடி ரூபாய் வருமானம்... அசுர வளர்ச்சியை எட்டிய அதானி.. வெளியான பட்டியல்
உலக பணக்கார பட்டியலை ஹூரூன் இந்தியா 2021-ம் வெளியிட்டுள்ளது. அதில், நாட்டின் மிகப்பெரிய வணிக குழுமமான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வழக்கம்போல முதலிடத்தில் உள்ளார்.
அவரது மதிப்பு 7,18,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இரண்டாவது இடத்தில் மற்றொரு பில்லியனர் ஆன கவுதம் அதானி 5,05,900கோடி ரூபாயுடன் இடம்பெற்றுள்ளார்.
இதன் பின்னர் HCL இன் ஷிவ் நாடார் 2,36,600 கோடியுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும், 4-ம் மற்றும் 5-ஆம் இடத்தில் எஸ்பி ஹிந்துஜா & பேமிலி மற்றும் எல்என் மிட்டல் உள்ளது.
மேலும், சீரம் இன்ஸ்டிடியூட்டின் சைரஸ் பூனாவல்லா 1,63,700 கோடியுடன் 6-வது இடத்தில் உள்ளார். இதில், முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின், வளர்ச்சி விகிதத்தை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 9 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
ஆனால் இரண்டாம் இடத்தில் இருக்கும் கௌதம் அதானி மற்றும் குழுமத்தின் வளர்ச்சி, கடந்த ஆண்டை காட்டிலும் 261 சதவீதம் கூடுதலாக உள்ளது. நாள் ஒன்றுக்கு அதானி குழுமம் ஈட்டும் வருமானம் 1,002 கோடி ஆகும்.
