வாயு தொல்லையால் சிரமப்படுகிறீர்களா? உடனே நிவாரணம் கிடைக்கும் கசாயம்
உடலில் வாயு பிரிகை நிகழ்வது மிகவும் இயல்பானது.
உங்களுக்கு உண்டாகும் சிறு அசௌகரியங்கள் மற்றும் சங்கடங்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மனித உடலிலிருந்து வாயு வெளியேறுவது என்பது நீங்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறீர்கள் என்பதையே குறிக்கும்.
மனித உடலில் இருந்து வாயு வெளியேறக் காரணமான உணவுகள் இதயத்தை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள உதவும்.
இந்த வாயு பிரச்சனை அதிகமாக இருப்பவர்களுக்கு தீர்வாக வித்தியாசமான முறையில் அருமையான நாட்டு கசாயம் எவ்வாறு தயாரிப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த கசாயத்தை குடித்தால் உடலில் உள்ள வாயுக்களை வெளியேற்றுவதுடன் உடல் வலியையும் குறைக்கிறது.
தேவையான பொருட்கள்
- சித்தரத்தை. - 5கிராம்
- சுக்கு - 5 கிராம்
- மிளகு. - 5 கிராம்
- திப்பிலி. - 5 கிராம்
- அக்கரகாரம். - 5 கிராம்
- பனைவெல்லம் - தேவையான அளவு
- மஞ்சள் தூள். - 2 சிட்டிகை
செய்யும் முறை
சித்தரத்தை, சுக்கு, மிளகு, திப்பிலி, அக்கரகாரம் ஆகிய பொருட்களை நன்றாக சுத்தம் செய்து அடித்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி இடித்து பொடியாக வைத்துள்ள கலவையை சேர்த்து பின்னர் மஞ்சள்துள் மற்றும் பனை வெல்லத்தை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
இதை நன்றாக சுண்ட வைத்து கசாயமாக வந்ததன் பின்னர் வடிகட்டி எடுத்து குடித்து வந்தால் வாயு தொல்லைக்கு நிவாரணம் கிடைக்கும்.
இந்த கசாயத்தை காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் குடிக்கலாம்.