சிலிண்டரை எப்படி வைக்க வேண்டும் தெரியுமா? இந்த பிழையை செய்யாதீர்கள்... ஆபத்து?
cylinder
home tips
By Nivetha
வீட்டை பராமரிக்கும் போது வீட்டில் இருக்கும் பொருள்களையும் உரிய முறையில் பராமரிக்க வேண்டும்.
அப்படி தவறும் பட்சத்தில் அவை சமயத்தில் மிகப்பெரிய விபரீதத்தை உண்டு செய்துவிடும் அத்தகைய ஆபத்து நிறைந்தது அத்தியாவசிய பொருளாய் வீட்டுக்குள் நுழைந்துவிட்டது சிலிண்டர் பயன்பாடும்.
இதை எப்படி பாதுகாப்பாக கையாள்வது பார்க்கலாமா?
- சிலிண்டரை இப்படிதான் வைக்க வேண்டும் சமையல் அறையில் சிலிண்டரை வைக்கும் போது அந்த அறையில் மின்சாதன பொருள் களை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
- மின்சாதன பொருள்களில் எப்போ தேனும் ஏற்படும் மின் அழுத்த ஏற்றதாழ்வில் சிலிண்டரிலும் கசிவை உண்டாக்கி ஆபத்தை ஏற்படுத்திவிட வாய்ப்பு உண்டு.
- ஒரு சிலிண்டருக்கு அருகிலேயே இன்னொரு சிலிண்டரை வைக்க வேண்டாம்.
- தற்போது மாடுலர் கிச்சன் என்ற பெயரில் சிலிண்டரை மரத்தால் ஆன கபோர்டு இருக் கும் இடத்தில் வைத்து மூடிவிடுவார்கள். இதனால் சிலிண்டரில் இருந்து வாயு கசிந்தாலும் அது வெளியே தெரிவதில்லை. அதனால் சிலிண்டரை காற்றோட்டமான இடத்தில் நிற்க வைக்க வேண்டும்.
- சிலர் சிலிண்டரை செங்குத்தாக வைப்பதும் கூட விபத்துக்கு காரணமாகிவிடக்கூடும். சிலிண்டரை மாட்டும் போதிருந்து சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.
- சிலிண் டரை பொருத்துவதற்கு முன்பு அதன் மூடியை திறந்ததும் அதில் கசிவு வெளியேறுகிறதா என்று கவனிக்க வேண்டும்.
- சோப்பு நீர் கலந்த நீரை அதன் வாய்புறம் ஊற்றினால் வாயு கசிந்தால் அதில் குமிழ் உருவானால் கசிவு இருப்பதை உணரலாம்.
- அப்படி இருந்தால் உடனடியாக சிலிண்டர் மூடியை கொண்டு மூடிவிடவும். சமைக்கும் போது அடுப்புக்கு அருகில் காற்று வரக்கூடிய அளவு ஜன்னல் திறந்திருந்தால் அதை தடுத்துவிடுங்கள்.
- இதனால் சமைக்கும் போது அடுப்பு காற்றுக்கு அணைந்து அதிலிருந்து கசியும் வாயுவால் ஆபத்து உண்டாகலாம். அடுப்பு அருகில் வெப்பம் அதிகமான பொருள்களை வைத்திருக்க வேண்டாம்.
- குறிப்பாக எளிதில் தீ பற்றும் பொருள்களை வைக்க வேண்டாம். சமைக்கும் போது குறிப்பாக பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்துவிட்டு எங்கேயும் போக வேண்டாம். இதனால் பால் பொங்கி வழிந்து அடுப்பு அணைந்து கேஸ் லீக் ஆக கூடும்.
- இரவு தூங்கும் போதும் சிலிண்டரை அணைத்து விட்டு படுக்க வேண்டும். அதே போல் காலையில் எழுந்ததும் உடனடியாக கேஸ் அடுப்பு அருகில் சென்று பற்ற வைக்காமல் முதலில் ஜன்னல் திறந்து வெளிச்சம் வந்த பிறகு அடுப்பை பற்ற வையுங்கள்.
- ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கேஸ் பைப் லைனை மாற்றுங்கள். வருடத்துக்கு ஒருமுறை அடுப்பு கேஸ் லைன் வரும் பைப் அனைத்தையும் செக் செய்யுங்கள்.
-
கசிவு இருப்பது போல் சந்தேகம் இருந்தால் தயங்காமல் உங்கள் கேஸ் ஏஜென்சியை தொடர்பு கொள்ளுங்கள்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US