கேஸ் சிலிண்டர் விபத்திற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? இந்த ஒரு பொருள் தானாம்
இன்று பல வீடுகளில் சமையலுக்கு கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி தான் சமையல் செய்து வருகின்றனர்.
இவ்வாறான தருணத்தில் பல அசம்பாவிதங்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றது. இதற்கு காரணத்தினை கட்டாயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
கீழே படத்தில் காணப்படும் வாஸர் தான் பல வீடுகளில் கேஸ் சிலிண்டர் வெடிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
சிலிண்டரில் பொறுத்தப்படும் இந்த வாஸர், ஒழுங்காக இல்லை என்றால் சிலிண்டரை ஸ்டவ் உடன் இணைக்கும்போது கேஸ் சத்தத்துடன் வெளிவரும் .
அது போன்ற சத்தம் வந்தால் உடனே சிலிண்டர் விநியோகம் செய்பவர்களுக்கு தகவல் கொடுக்க தாமதிக்காதீர்கள்.
அதே போன்று சிலிண்டர் விநியோகம் செய்பவர்களும் மானிய விலையில் தானே வாங்குகிறார்கள் என்ற அசட்டை இல்லாமல் மக்களின் உயிரைக் காப்பாற்ற சிலிண்டரை ஒருமுறை சரிபார்த்து விநியோகம் செய்யவும்.