வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பூண்டு ஊறுகாய்! இப்படி செய்தால் சுவை பிரமாதம்
பொதுவாக உணவிற்குரு சைட்டிஷ் வேண்டும். பல நன்மைகளை அள்ளி தர கூடிய பல ஊறுகாய்களை சாப்பிடுவார்கள். ஊறுகாய் பிரியர்கள் அதிகமாக சாப்பிடுவது பூண்டு ஊறுகாய் தான். அன்றாடம் சமைக்கும் உணவில் பூண்டு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
வயிற்றில் உள்ள பிரச்சனைகளை இல்லாமல் செய்வதற்கு பூண்டு சாப்பிடுவது நன்மை தரும். பூண்டில் இதில் சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆனால், இதை சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் வருவதால் மக்கள் இதை சமைத்து சாப்பிடுகிறார்கள்.
ஆனால், பூண்டை வெறும் வயிற்றில் உட்கொண்டால், அது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். அந்த வகையில் பூண்டு ஊறுகாய் செய்து சாப்பிடுதல் உடலுக்கு எவ்வளவு நன்மை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பூண்டு பல் – 150 கிராம் (தோல் நீக்கியது)
- இஞ்சி - பூண்டு விழுது– ஒரு ஸ்பூன்
- மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
- வரமல்லித் தூள் – 2 ஸ்பூன்
- சீரகத் தூள் – ஒரு ஸ்பூன்
- எலுமிச்சை சாறு
- அல்லது வெள்ளை வினிகர் – 2 ஸ்பூன்
- வெல்லம் – ஒரு ஸ்பூன்
- எண்ணெய் – கால் கப்
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
- வெந்தயம் – கால் ஸ்பூன்
- கடுகு – கால் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
பூண்டை உரித்து சூடான தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும். பின்னர் அதை வடிகட்டி ஒரு துணியில் உலரவிடவேண்டும். இதன் பின்னர் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
இது சூடாகியதும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.
பின்னர் ஊறவைத்த பூண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவேண்டும். அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு என அனைத்தையும் சேர்த்து வதக்கவேண்டும். எடுத்து எலுமிச்சை சாறு மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
இதை செய்து முடித்த பின்னர் முழுமையாக ஆறியவுடன் காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும். இதை இரண்டு நாட்கள் ஊறவைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |