செரிமானத்தை தூண்டும் பூண்டு மிளகு ரசம்! தக்காளி தேவையில்லை...
தடபுடலாக சைவ விருந்து சாப்பாடு முடிந்தவுடன் கடைசியாக ரசம் சாப்பிட்டால் மட்டுமே முழு திருப்தி கிடைக்கும்.
செரிமானத்திற்கு மிக உகந்தது ரசம், மிளகு பூண்டு தூக்கலாக போடப்பட்டு வைக்கப்படும் ரசத்துக்கு அடிமையானர்கள் பலர்.
இந்த பதிவில் தக்காளி இல்லாமல் ரசம் வைப்பது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புளி- நெல்லிக்காய் அளவு
சீரகம்- ஒரு டீஸ்பூன்
மிளகு- ஒன்றரை டீஸ்பூன்
கொத்தமல்லி விதைகள்- ஒரு டீஸ்பூன்
பூண்டு- 7 பற்கள்
மிளகாய்- 3
மஞ்சள் தூள், பெருங்காயத் தூள்- தேவையான அளவு
கடுகு, வெந்தயம்- சிறிதளவு
கருவேப்பிலை, கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை
புளியை சிறிது நேரம் ஊறவைத்துவிட்டு கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகு, கொத்தமல்லி விதைகள் போட்டு அரைத்துக் கொள்ளவும், இதனுடன் பூண்டு, பெருங்காயத்தூள், ஒரு கொத்து கருவேப்பிலை, மிளகாய் வத்தல் போட்டு அரைக்கவும்.
இதனை புளி கரைசலில் போட்டு விட்டு, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து அப்படியே வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளித்ததும், கடுகு, வெந்தயம் சேர்த்து கருவேப்பிலை சேர்க்கவும், இதில் புளி கரைசலை ஊற்றி விட்டு கொதி வரும் நிலையில் அணைத்துவிடவும், கடைசியாக கொத்தமல்லி இழைகளை தூவினால் பூண்டு மிளகு ரசம் தயாராகிவிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |