உங்கள் கழிவறையை பளபளக்க செய்ய வேண்டுமா? இந்த ஒரு பல் பூண்டு போதும்
நம் வீட்டில் மிகவும் அசுத்தமான இடம் என்றால், அதில் ஒன்று கழிவறை தான். அதை சுத்தமாக வைத்துக்கொள்ள பல பொருட்களை பயன்படுத்துவோம்.
ஆனால், நம் வீட்டின் சமையலறையில் இருக்கும் ஒரு பொருள் கழிவறையில் உள்ள அனைத்து கிருமிகளை அழிக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
ஆம், அது ஒரு பல் பூண்டு தான். கழிவறையை சுத்தம் செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதில், பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் தான் பூண்டிற்கு தனித்துவமான நறுமணத்தை வழங்குகிறது.
மேலும், இவை பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அண்ட விடாமல் தடுக்கிறது. தற்போது பூண்டை வைத்து கழிவறையை எப்படி சுத்தம் செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

வழிமுறைகள்
* முதலில் நீங்கள் இரவு தூங்குவதற்கு முன் ஒரு பல் பூண்டை நன்கு தட்டி கழிவறையில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் ஒரு முறை தேய்த்து கழுவினால், கழிவறையில் உள்ள துர்நாற்றம் நீங்குவதோடு கிருமிகளும் அழிந்துவிடும்.
* அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நீரானது நன்கு கொதித்த பின்பு இரண்டு பல் பூண்டுகளை பொடியாக நறுக்கி போட்டு நன்கு கொதித்த பின்பு அடுப்பை அணைக்க வேண்டும்.
* பின்பு 15 நிமிடங்கள் கழித்து அந்நீரை கழிவறையில் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து மறு நாள் காலையில் தேய்த்து கழுவ வேண்டும்.
* தொடர்ந்து, கழிவறையில் இருக்கும் துர்நாற்றத்தில் குடியிருப்பது பாக்டீரியாக்கள் தான்.
* அதை அழிக்க பூண்டு மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் உங்கள் கழிவறையில் இருக்கும் கிருமிகளை அழிக்க இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்.