மழைக்காலத்தில் வீட்டில் பூண்டு இருக்கா? அப்போ அசத்தல் சுவையில் பூண்டு குழம்பு செய்ங்க
பூண்டு அதன் வலுவான சுவை மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்பட்ட பல்துறை மூலப்பொருள் ஆகும். இது பொதுவாக உணவுகளை மேம்படுத்த சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
பூண்டில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. இதன் நறுமணத்துக்கு அலிசின் என்ற உட்பொருள் காரணமாகும். இதுதான் பூண்டை உங்களுக்கு ஏற்ற உணவாக மாற்றுகிறது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகள் போன்ற அதன் சாத்தியமான ஆரோக்கிய பண்புகளை எதிர்க்கவும் பயன்படுத்தப்படுகின்றது.
மழைக்காலத்தில் பொதுவாக வெளியே செல்ல முடியாமல் இருக்கும். இந்த நேரத்தில் சமைக்க பொருட்கள் வாங்குவது கடினம். இதற்காகவே வீட்டில் இருக்கும் பூண்டை வைத்து அசத்தல் சுவையில் பூண்டு குழம்பு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். இது சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பதுடன் உடலுக்கு பல நன்மைகளை யும் கொடுக்கக்கூடியது.
தேவையான பொருட்கள்
- நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
- தாளிப்பு வடகம் – ஒரு ஸ்பூன்
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- பூண்டு பல் – 25
- இந்துப்பு – தேவையான அளவு
- குழம்பு மிளகாய்த் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
- புளித்தண்ணீர் – கால் கப்
செய்யும் முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், தாளிப்பு வடகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். பின்னர் பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து இந்துப்பு, குழம்பு மிளகாய்த்தூள், புளித்தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.
மூடிவைத்து எண்ணெய் பிரிந்தவுடன் இறக்கினால் சூப்பர் சுவையான பூண்டு குழம்பு தயார். இதை சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து, அப்பளம் அல்லது முட்டைகோஸ் பொரியலுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
இதை காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் இரண்டு வாரங்கள் வரை கெட்டுப்போகாது. இதை தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம். இதை உங்களுக்கு தேவையான அளவு அதிகமாகக் கூட செய்து ஸ்டோர் செய்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |