Garlic Benefits: வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் முகப்பரு வராதாம்- செய்து பாருங்க!
பொதுவாக தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டு வந்தால் சருமம் தொடர்பான பிரச்சினைகள் குறையும் என தகவல் வெளியாகியுள்ளது.
முகத்தை அசிங்கப்படுத்தும் முகப்பரு, பருக்கள் இப்படி எந்த கறையும் முகத்தில் இருக்காது. ஏனெனின் முகத்தில் இருக்கும் துளைகளை அடைத்து இளமையான தோற்றத்தை பூண்டு எமக்கு தருகிறது.
பூண்டு சாப்பிடும் என்பது சாதாரண விடயமாக இருக்காது சிலருக்கு அதன் சுவை, மணம் பிடிக்காமல் கூட இருக்கும்.
அந்த வகையில், பூண்டிற்கும் சரும தொடர்பான பிரச்சினைகளுக்கும் என்ன தொடர்பு? அப்படி எப்படி முகப்பருக்கள் மறையும்? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பூண்டு சாப்பிட்டால் என்ன நடக்கும்?
1. விலையுயர் கிரீம்களை விட பூண்டில் இருக்கும் ஊட்டசத்துக்கள் முகத்தை அழகாக்கும்.
2. தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் முகப்பரு, பருக்கள் உள்ளிட்டவைகள் வராமல் தடுக்கலாம்.
3. சிலர் சிறுவயதிலேயே வயதானவர்கள் போல் காட்சிக் கொடுப்பார்கள். இப்படியான பிரச்சினையுள்ளவர்கள் காலையில் தினமும் பூண்டு சாப்பிடலாம்.
4. நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது பூண்டு சாப்பிட்டால் அதிகரிக்கும். அடிக்கடி தொற்றுகளில் சிக்கிக் கொள்பவர்கள் பூண்டை தினமும் காலையில் சாப்பிடலாம்.
5. உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றும் வேலையை பூண்டு செய்கிறது.
6. தமனிகள் கடினமாவதைத் தடுப்பதன் மூலமும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |