பூண்டை பச்சையாக மென்று சாப்பிட்டால் என்ன நடக்கும்? 30 நாட்கள் முயற்சி!
பொதுவாக மனித உடலில் வரும் அத்தனை நோய்களுக்கும் உணவில் மருந்து உள்ளது. ஆனால் சீக்கிரம் குணமாக வேண்டும் என்பதற்காக சிலர் இதனை நம்புவது இல்லை.
இதன்படி, சமையலறையில் உள்ள முக்கிய பொருட்களின் ஒன்றான பூண்டில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது.
இது உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான மருத்துவ பலன்களை தருகிறது. எவ்வளவு மருத்துவ குணங்கள் இருந்தாலும் 30 நாட்கள் தொடர்ந்து சாப்பிடும் பொழுது உடலில் பாரிய மாற்றங்களை பார்க்கலாம்.
பூண்டில் அல்லிசின் என்ற கலவை உள்ளது என்று பலருக்கும் தெரியும். ஆனால் இதுவொரு சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடண்ட் என்பது பலருக்கும் தெரியாது.

அல்லிசின் எனப்படும் நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்த்து போராட இது உதவியாக இருக்கிறது.
அந்த வகையில், பூண்டை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிடும் பொழுது உடலில் என்னென்ன மாற்றங்களை பார்க்கலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
பூண்டு சாப்பிடுவது எதற்காக?
1. சிலர் இளம் வயதில் வயதானவர்கள் போன்று இருப்பார்கள். அப்படியான பிரச்சினையுள்ளவர்கள், புற்றுநோய், மூளை கோளாறுகள் ஆகிய நோய்களுடன் போராடுபவர்கள் பூண்டை தினமும் சாப்பிடலாம். இது செரிமானத்தில் தாக்கம் செலுத்தும்.

2. ரத்த அழுத்தம் பிரச்சினையுள்ளவர்கள் தினமும் பூண்டு சாப்பிடலாம். அத்துடன் இதய நோய் பிரச்சினையுள்ளவர்களுக்கும் இது உதவியாக இருக்கும். உங்களின் வளர்சிதை மாற்றத்தை அதிகமாக்கி, கொழுப்பை குறைக்கும்.
3. உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் எப்படியாவது அதனை குறைத்து விடலாம் என முயற்சி செய்வார்கள். அவர்கள் பூண்டு சாப்பிடலாம், ஏனெனின் இது பசியை கட்டுபடுத்தி அதிகமாக சாப்பிடுதை குறைக்கும்.

இவ்வளவு பலன்களை அள்ளிக் கொடுத்தாலும், ஒரு நாளைக்கு 1 முதல் 2 பூண்டு பற்கள் சாப்பிடுவது நல்லது. பச்சையாக அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இன்னும் சிலர் சாலட், பிரெட்டில் வைத்து அல்லது தேனுடன் கலந்து சாப்பிடலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |