மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்கை அமரன்- படபிடிப்பில் நடந்தது என்ன?
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் கங்கை அமரன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
கங்கை அமரன்
தமிழ் திரைத்துறையில் இசைமையப்பாளராக அறிமுகமாகிய கங்கை அமரன் (77), “கோழிக் கூவுது” என்ற படத்தின் மூலம் 1982-ல் இயக்குநராக கால்பதித்தார்.
பல படங்களுக்கு பாடல்கள் எழுதி வரும் கங்கை அமரன் சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றிள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது கங்கை அமரன் புதிய படத்தில் நடித்தும் வருகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் சிவகங்கை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து கொண்டிருந்தது.
மருத்துவமனையில் அனுமதி
இந்த நிலையில், மானாமதுரையில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்ற கங்கை அமரனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
உடனே அவருக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி செய்தி சமூக வலைத்தளங்களில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |