விநாயகர் சதுர்த்தி... அதிகாலையிலேயே செய்ய வேண்டிய பூஜை விதிகள் மற்றும் பலன்கள் என்னென்ன?
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று முதல் கடவுளான விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் செப்டம்பர் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று பிள்ளையார் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இதையடுத்து, இங்கு விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு எப்படி செய்ய வேண்டும். பூஜை விதிகள் என்ன, அதன் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம். எந்த ஒரு சுப காரியத்தை தொடங்குவதற்கு முன் வினை தீர்க்கும் விநாயகரை வழிபட்டுத் தான் தொடங்க வேண்டும் என்பது இந்து மதத்தின் நம்பிக்கை.
விநாயகர் சதுர்த்தி அன்று நாம் புதிய களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து வழிபடுவதோடு, அதை 3 அல்லது 5 நாட்கள் தினமும் வழிபட்டு அதை நீர் நிலைகளில் விஜர்சனம் செய்ய வேண்டும் என்பது நம்பிக்கை.
பூஜை பொருட்கள்
பிள்ளையார், அரிசி, மஞ்சள், மஞ்சள், குங்குமம், சந்தனம், அறுகம்புல்,கற்பூரம்,கணபதிக்கு உடுத்த ஒரு பட்டுத் துணி அல்லது காவி துணி. பூ, அருகம் புல் அல்லது எருக்கம்பூ மாலை, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலைப் பாக்கு. வாழைப்பழம், உள்ளிட்ட பழங்களை வைக்கவும்.
விநாயகருக்குப் பிடித்த கொழுக்கட்டை, மோதகம் உள்ளிட்ட இனிப்பு வகைகள், பலகாரங்கள்
பூஜைக்கு முன் செய்ய வேண்டியவை
ஒரு பலகையை எடுத்து அதை சுத்தம் செய்து, கோலமிட்டு, அதன் மீது பிள்ளையார் சிலையை வைக்கவும். அவருக்கு மஞ்சள் அல்லது சந்தனத்தால் பொட்டு வைத்து, அதன் மீது குங்கும திலகம் இடுங்கள்.
அடுத்து, பிள்ளையார் சிலைக்கு முன் ஒரு பித்தளை தட்டு வைத்து, அதில் சிறிது அரிசியை போட்டு அதன் மீது ஒரு தூய வெற்றிலை வைக்கவும். பின்னர் மஞ்சள் தூளுடன் சிறுது தண்ணீர் ஊற்றி பிள்ளையார் பிடித்து, வெற்றிலை மீது வைக்கவும். ‘ஓம் கம் கணபதயே நமஹ;' என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருங்கள்.
மாலையில்......
களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகருக்கு நீங்கள் வாங்கிய புது துணியால் அலங்கரிக்கலாம். அதற்கு எருக்கம்பூ மாலை, மலர் மாலையை சூட்டவும், அருகில் அருகம் புல் பரப்பி வைக்கலாம்.
மேலும், எந்த ஒரு பூஜையை தொடங்கும் முன்னர் கணபதியை வணங்கிவிட்டுத் தான் தொடங்க வேண்டும். பின்னர் குல தெய்வத்தை கும்பிட வேண்டும்.
விநாயகர் சதுர்த்தியில், நாயகனான கணபதியை வழிபட்டு பூஜையை தொடங்கலாம். நாம் விநாயகர் சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு அபிஷேகம் செய்வது மிகவும் விசேசமானது. ஆனால் நம்மில் பெரும்பாலும் களிமண்ணால் செய்யப்பட்ட சிலை வைத்து பூஜிப்பது வழக்கம்.
களிமண் விநாயகரை புதிதாக வாங்கி பூஜிப்பது சிறப்பானது. அதே சமயம் நாம் அபிஷேகம் செய்ய வெண்கல விநாயகரை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த சிலைக்கு பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், அரிசி மாவு, இளநீர், சர்க்கரை, சந்தனம் என வரிசையாக அபிஷேகம் செய்ய வேண்டும்.
அபிஷேகம் செய்த விநாயகரையும் நாம் அலங்கரித்து, புது விநாயகர் அருகில் வைத்து பூஜை செய்து வழிபடலாம்.