விநாயகர் சதுர்த்தியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்... எச்சரிக்கை!
விநாயகர் பிறந்த தினம் தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.
இது 10 நாட்கள் ஆடம்பரமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்படும் திருவிழா.
இந்த நாட்களில் விநாயகப் பெருமான் பூமியில் அருள்பாலித்து தனது பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும், ஞானத்தையும், செழிப்பையும் தருகிறார் என்று நம்பப்படுகிறது.
சதுர்த்தி 2022 ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. முதன்மை கடவுளான விநாயகரின் அருள் இருந்தால் வாழ்வில் உள்ள தடைகள் விலகி வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
கணபதி ஸ்தாபனாவுக்கு முன் மனதில் கொள்ள வேண்டியவைகள்
விநாயகர் சிலையை வீட்டிற்கு கொண்டு வரும் முன், வீட்டை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
ஒரு கலசத்தில் நீரை நிரப்பி, அதன் மேல் ஒரு தேங்காயை வைத்து வெற்றிலையால் அலங்கரிக்க வேண்டும். * விநாயகர் சிலையை வைக்கும் பலகையை சுத்தம் செய்து அலங்கரிக்க வேண்டும்.
விநாயகர் சிலையின் இடது தோளில் பூநூலை அணிவிக்க வேண்டும்.
விநாயகர் சிலைக்கு சந்தன திலகம் இட்டு, எருக்கம்பூ மாலை மற்றும் அருகம்புல் மற்றும் சிவப்பு நிற பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.
பின் நெய் தீபம் ஏற்றி, மந்திரங்களை சொல்லி, விநாயகருக்கு பிடித்த மோதகம், கொழுக்கட்டை, லட்டு ஆகியவற்றை படைக்க வேண்டும்.
விநாயகர் சிலையை வீட்டில் வைத்தால் செய்யக்கூடாதவை
- வீட்டில் விநாயகர் சிலையை வாங்கி வைத்த பின், பூண்டு மற்றும் வெங்காயம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- விநாயகர் சிலையை வீட்டில் வைத்த பின்னர், அவரை கவனிக்காமல் இருக்கக்கூடாது. முக்கியமாக வீட்டை பூட்டிவிட்டு எங்கும் செல்லக்கூடாது.
- விநாயகரை நீரில் கரைக்கும் முன், அவருக்கு ஆரத்தி, பூஜை மற்றும் பிரசாதம் வழங்க தவறக்கூடாது.
- வீட்டில் விநாயரை வைத்தால், சுப முகூர்த்தத்தில் பூஜையை செய்ய வேண்டும்.
- வீட்டில் விநாயகர் சிலை இருக்கும் வரை இறைச்சி மற்றும் மதுவைத் தவிர்க்க வேண்டும்.