10 ஆண்டுக்கு பிறகு அதிசக்திவாய்ந்த விநாயகர் சதுர்த்தி! இணையும் 4 கிரகங்கள் - எந்த நேரத்தில் சிலை வாங்கனும்?
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் பிறந்த நாள் தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு விநாயகரின் பிறந்த நேரத்தைப் பற்றி சாஸ்திரங்களில் ஆச்சரியரியமான பல உண்மைகளை குறிப்பிட்டுள்ளது.
இப்போது 2022 விநாயகர் சதுர்த்தி அன்று நிகழும் சுப யோகம் குறித்து விரிவாக காண்போம்.
10 ஆண்டுகளுக்கு பின்...
கணேச புராணத்தின் படி, விநாயகர் பத்ரபத சுக்ல சதுர்த்தி அன்று நண்பகலில் பிறந்தார்.
அதுவும் விநாயகர் புதன்கிழமை அன்று பிறந்தார். இந்த ஆண்டு பத்ர சுக்ல சதுர்த்தி திதி ஆகஸ்ட் 31 ஆம் தேதி புதன்கிழமை அன்று பிற்பகல் வரை இருப்பது மிகவும் சிறப்பு.
சதுர்த்தி திதி ஆகஸ்ட் 30 ஆம் தேதி செவ்வாய் கிழமை மதியம் 3.33 மணிக்கு தொடங்கி, மறுநாள் ஆகஸ்ட் 31 மதியம் 3.22 வரை உள்ளது. நண்பகல் வரை சதுர்த்தி திதி இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
நம்பிக்கையின் படி, இது மிகவும் நல்ல தற்செயல் நிகழ்வு. இந்நாளில் விநாயகரை வழிபடுவதால், பக்தர்களின் ஆசைகள் நிறைவேறுவதோடு, வாழ்க்கை சந்தோஷமாகவும் இருக்கும்.
விநாயகர் சதுர்த்தி
அன்று கிரக நிலைகள் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று மதியம் வரை சந்திரன் புதன் ஆளும் கன்னி ராசியில் இருப்பார்.
இதே நாளில் சுக்கிரன் தனது கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு செல்கிறார். குரு தனது சொந்த ராசியான மீன ராசியில் இருப்பார். சனி மகர ராசியில் இருப்பார்.
சூரியன் சிம்ம ராசியிலும், புதன் அதன் சொந்த ராசியான கன்னி ராசியிலும் இருப்பார்கள். அதாவது இந்நாளில் 4 கிரகங்கள் தனது சொந்த ராசியில் இருப்பார்கள். இது தவிர விநாயகர் சதுர்த்தி அன்று இரண்டு கிரகங்களின் சேர்க்கையும் நிகழ்கிறது.
விநாயகர் சதுர்த்தி
அன்று கிரக நிலைகள் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று மதியம் வரை சந்திரன் புதன் ஆளும் கன்னி ராசியில் இருப்பார். இதே நாளில் சுக்கிரன் தனது கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு செல்கிறார்.
குரு தனது சொந்த ராசியான மீன ராசியில் இருப்பார். சனி மகர ராசியில் இருப்பார். சூரியன் சிம்ம ராசியிலும், புதன் அதன் சொந்த ராசியான கன்னி ராசியிலும் இருப்பார்கள்.
அதாவது இந்நாளில் 4 கிரகங்கள் தனது சொந்த ராசியில் இருப்பார்கள். இது தவிர விநாயகர் சதுர்த்தி அன்று இரண்டு கிரகங்களின் சேர்க்கையும் நிகழ்கிறது.
ரவி யோக பலன்கள்
ரவி யோகம் என்பது ஒரு மங்களகரமான சுப யோகம். இந்த யோகமானது புதிய கார் வாங்குவது, கடைகளைத் திறப்பது, வீடு வாங்குவது போன்றவற்றை செய்ய உகந்ததாக இருக்கும். இது தவிர இந்த ரவி யோகம் எதிர்மறை விளைவுகளைக் குறைக்கிறது.
விநாயகர் சிலை வாங்க சிறந்த நேரம்
ஆவணி மாதத்தில் சுக்ல பக்ஷத்தின் சதுர்த்தி திதி ஆகஸ்ட் 30 ஆம் தேதி மதியம் தொடங்கி, ஆகஸ்ட் 31 ஆம் தேதி மதியம் 3.22 வரை உள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் விநாயகர் சிலையை வாங்கி வழிபடுவது நல்லது.
சந்திரனை பார்க்கக்கூடாது
இந்து புராணங்களின் படி, விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனைப் பார்க்கக்கூடாது என்று நம்பப்படுகிறது.
இந்த நன்னாளில் சந்திரனைப் பார்த்தால் மித்ய தோஷத்தை உருவாக்கும். பஞ்சாங்கத்தின் படி, ஆகஸ்ட் 30 ஆம் தேதி சந்திரனைப் பார்ப்பதைத் தவிர்க்கும் நேரமானது மதியம் 3.33 மணிக்கு தொடங்கி இரவு 8.40 மணிக்கு முடிகிறது.
மற்றும் ஆகஸ்ட் 31 அன்று காலை 9.29 மணிக்கு தொடங்கி, இரவு 9.10 மணி வரை சந்திரனை பார்க்கக்கூடாது.