சாவின் விளிம்பிற்கு சென்ற நபர்! எனர்ஜி ட்ரிங்க் குடித்ததால் விபரீதம்
அமெரிக்காவில் விளையாட்டு நபர் ஒருவர் எனர்ஜி ட்ரிங்க் குடித்து இறப்பு வரை சென்ற திரும்பி வந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
10 நிமிடங்களில் 12 கேன் எனர்ஜி ட்ரிங்க்
குறித்த 36 வயதான கேமர் எனர்ஜி ட்ரிங்க் என்று கூறப்படும் ஆற்றல் பானத்தினை 10 நிமிடங்களில் 12 கேன் குடித்துள்ளார். சக ஊழியர்களை கவரும் வகையில் அவர் செய்த இந்த செயல் சாவின் விழும்பிற்கே அவரை கொண்டு சென்றுள்ளது.
அதாவது குறித்த பானத்தை குடித்த சில நிமிடங்களில் உடல் நிலை சரியில்லாமல் சென்ற நிலையில், அவர் மறுநாளே மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர் அதிக அளவ சர்க்கரை மற்றும் காஃபின் காரணமாக கணையத்தில் கடும் அழற்சி ஏற்பட்டுள்ளதாக கூறிய நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபபட்ட அந்த நபர் சாவின் விழும்பிற்கே சென்று வந்துள்ளார்.
ஆற்றல் பானத்தில் மூளையின் செயல்பாட்டைத் தூண்டும் வகையில் அதிகளவு காஃபின், மற்றும் சர்க்கரைகளின் இந்த ஆபத்து ஏற்படுவதாகவும், குறிப்பாக குழந்தைகள், இளம் வயதினர் இந்த பானத்தை அருந்த கூடாது என்றும் கூறப்படுகின்றது.
மேலும், இதய பிரச்சனை, நீரிழிவு இந்த பிரச்சினையையும் ஏற்படுத்துகின்றது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.