விளையாட்டிற்கு அடிமையாகிய இளைஞர்... வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட கத்தி, நகவெட்டி! நடந்தது என்ன?
பீகார் மாநிலத்தில் இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து கத்தி மற்றும் நகவெட்டி போன்ற பொருட்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டிற்கு அடிமையான இளைஞர்
பீகார் மாநிலத்தில் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் வசிக்கும் 22 வயது இளைஞர் ஒருவர் கடுமையான வயிறு வலியால் அவதிப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞரை அவரது குடும்பத்தினர் பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரது வயிற்றினை எக்ஸ்ரே எடுத்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆம் குறித்த இளைஞரின் வயிற்றில் உலோக பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பின்பு அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றிலிருந்து சாவி வளையம், சிறிய கத்தி, 2 நகவெட்டி உள்ளிட்ட பொருட்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
குறித்த இளைஞரிடம் இதுகுறித்து கேட்ட போது, வீட்டில் தன்னை செல்போனில் விளையாடக்கூடாது என்று கூறிய கோபத்தினால் இவ்வாறு பொருட்களை விழுங்க ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளார்.
சிகிச்சைக்கு பின்பு தற்போது இளைஞர் நலமுடன் இருப்பதாகவும், சில மனநலப் பிரச்சனைகள் மட்டும் குறித்த இளைஞருக்கு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |