குரு–சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி யோகம்: அக்டோபரில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?
ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலை மாற்றங்கள் மனித வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். அந்த வகையில், அக்டோபர் மாதத் தொடக்கத்தில் குரு பகவான் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மங்களகரமான கஜகேசரி யோகம் உருவாகவுள்ளது.
வேத நாட்காட்டியின்படி, அக்டோபர் 4ஆம் தேதி மனதின் காரணியாகக் கருதப்படும் சந்திரன் கடக ராசிக்குள் நுழைவார். ஏற்கனவே அங்கு குரு பகவான் சஞ்சரித்து வருவதால், குரு-சந்திர சேர்க்கை ஏற்பட்டு கஜகேசரி யோகம் உருவாகிறது.

இந்த யோகம் அக்டோபர் 6ஆம் தேதி இரவு சுமார் 10:17 மணி வரை நீடிக்கும். அதன்பின் சந்திரன் சிம்ம ராசிக்குள் நுழைவார். கஜகேசரி யோகம் அறிவு, நிதிநிலை, தொழில் மற்றும் நற்பெயரில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிட ரீதியாக கணிக்கப்பட்டுள்ளது.
அப்படி கடக ராசியில் உருவாகும் இந்த கஜகேசரி ராஜயோகத்தால் நிதி மற்றும் தொழில் நிலையில் உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்

துலாம் ராசியின் 10-வது வீட்டில் குரு-சந்திர சேர்க்கை ஏற்படுவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் காரணமாக பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். எந்த வேலையை தொடங்கினாலும் அதில் நல்ல வெற்றி உண்டாகும்.
வணிகர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கலாம். நிதி நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், முதலீடுகளை மேற்கொள்ளும்போது அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
மகரம்

மகர ராசியின் 7-வது வீட்டில் குரு-சந்திர சேர்க்கை ஏற்படுவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் தொழில் மற்றும் பணியிடத்தில் சிறப்பான பலன்ளை பெறுவார்கள்.
புதிய பொறுப்புகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும், புதிய வருமான வழிகளும் திறக்கும்.தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடனான உறவு மேலும் நெருக்கமாகும்.
கும்பம்

கும்ப ராசியின் 6-வது வீட்டில் குரு-சந்திர சேர்க்கை ஏற்படுவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் மூலம் பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.
உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளும் கிடைக்கலாம். மாணவர்கள் தங்களின் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். இருப்பினும், தொடர்ந்து முயற்சி செய்தால் மட்டுமே வெற்றியைப் பெற முடியும்.
தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்தக் காலத்தில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பதில் கவனம் செலுத்தினால் நிதி நிலையிலும் நல்ல ஆதாயத்தை பெற முடியும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |