நாக்கு ஊறும் சுவையான கேரட் அல்வா: எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா?
மலிவாக கிடைக்கும் கேரட்டில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து உள்ளன. கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என்று அதிகளவில் உள்ளது. தினமும் கேரட்டை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்புச்சத்து குறைந்து உடல் எடை கணிசமாக குறையும்.
கேரட்டை பச்சையாக அப்படியே சாப்பிட்டாலோ அல்லது ஜூஸ்ஸாக அரைத்து குடித்தாலோ அதன் சத்துக்களை முழுமையாக பெறலாம். தினமும் கேரட்டை சாப்பிட்டு வந்தால் இதய நோய், கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். சரி வாங்க....
சுவையான கேரட் அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம் -
தேவையான பொருட்கள்
கேரட் - 4
நெய் - 5 ஸ்பூன்
காய்ச்சிய பால் - 2 கப்
ஏலக்காய் - 3
முந்திரி - 6
பாதாம் பருப்பு - 5
சர்க்கரை - தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் கேரட்டை நன்றாக துருவிக்கொள்ள வேண்டும்.
பின்னர், ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் நெய் விட்டு, அதில் துருவி வைத்த கேரட்டை போட்டு நன்றாக பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.
இதன் பின்னர் 2 கப் காய்ச்சியப் பாலை அந்த கேரட்டில் ஊற்றி தீயை மெதுவாக வைத்து நன்றாக கிளறிக்கொண்டு இருக்க வேண்டும்.
பின்னர், சர்க்கரை போட்டு நன்றாக கிளற வேண்டும். பால் சுண்டி நெய் திரண்டு மேலே வரும்போது இறக்கி விட வேண்டும்.
பின்னர், ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய் விட்டு, முந்திரி, பாதாம் போட்டு வறுத்து எடுத்து, அதை கேரட் அல்வாவில் போட்டு கிளறி கிண்ணத்தில் பரிமாற வேண்டும்.
சுவையான கேரட் அல்வா ரெடி...
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |