கஜலட்சுமி யோகம்: குருவின் அருளால் கோடீஷ்வரராகும் ராசிகள் யார்?
ஜூன் மாதத்தில் மங்களகரமனா யோகங்கள் உருவாகிறது. குரு, சுக்கிரன், புதன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை நடக்கிறது. இதனால், கஜலட்சுமி, லட்சுமி நாராயண யோகங்கள் உருவாகிறது.

கஜலட்சுமி யோகம்
ஜோதிட ரீதியாக ஜூன் மாதம் மிகவும் மங்களகரமான கிரகம் எனப்படுகின்றது. இந்த மாதத்தில் சுப யோகங்களும் உருவாகிறது.
இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜூன் 8ஆம் தேதி சுக்கிரன் கடக ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இதனால் கஜலட்சுமி யோகம் உருவாகிறது.

இது செல்வம், மகிழ்ச்சி, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவற்றை குறிக்கிறது. ஜூன் மாதத்தின் நடுவில் சூரியன் மிதுன ராசியில் பெயர்ச்சி அடைகிறர். செவ்வாய் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைகிறார்.
புதனும் சுக்கிரனும் மிதுன ராசியில் இணைக்கின்றன. இதனால், லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. குரு, சுக்கிரன், புதன் ஆகிய மூன்று கிரகங்களால் சக்திவாய்ந்த யோகங்கள் உருவாகிறது.
அதாவது, ஹம்ச ராஜயோகம், கஜலட்சுமி ராஜயோகம், லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் பற்றி பார்க்கலாம்.

விருச்சிகம்
- ஜூன் மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். குடும்ப மகிழ்ச்சி அதிகரித்து, சொத்து விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வருமானம் உயரும், பழைய முதலீடுகளில் லாபம் கிடைக்கும். வேலை வாய்ப்புகள் மற்றும் தொலைதூர பயணங்களுக்கும் நல்ல வாய்ப்புகள் உருவாகும்.
கன்னி
- ஜூன் மாதத்தில் குருவின் சாதகமாக பார்வை கன்னி ராசியின் நான்காம் வீட்டில் அமைகிறது. குடும்ப ஆதரவும் ஒத்துழைப்பும் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறி, புதிய தொழில் தொடங்க நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் உயரும், எதிர்பாராத நிதி ஆதாயங்களும் தொழில் முன்னேற்றமும் ஏற்படும். எதிர்பாராத வாய்ப்புகள் உருவாகும்.
மிதுனம்
- ஜூன் மாதத்தில் குருவின் சாதகமான பார்வையால் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், செல்வம் பெருகும். பணியிடத்தில் மரியாதை உயரும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். நீண்டநாள் பிரச்சனைகள் தீர்ந்து, வேலை வாய்ப்பு மற்றும் திருமண யோகம் கைகூடும். உடல்நலத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலையில்லாதவர்கள் நல்ல செய்திகளை கேட்பீர்கள். அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. உடல் நலனில் முன்னேற்றம் இருக்கும்.
மகரம்
- ஜூன் மாதம் கடக ராசிக்காரர்களுக்கு மங்களகரமான பலன்களை தரும். தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம், அங்கீகாரம் கிடைக்கும். வருமானம் நிலையாக அதிகரித்து, முதலீடுகளில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று, புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகலாம்.
மேஷம்
- ஜூன் மாதத்தில் நிகழும் செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியால் மேஷ ராசியில் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் தனது சொந்த நிலைக்கு செல்வதால் மேஷ ராசிக்காரர்களுக்கு மங்களகரமான பலன் கிடைக்கும். நீண்ட கால பணிகளை படிப்படியாக முடிப்பீர்கள். வேலையில் வெற்றியை காண்பீர்கள். இந்த காலக்கட்டத்தில் காரியம் நிறைவேறும். முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். பணியிடத்தில் மரியாதை, அங்கீகாரம் கிடைக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).