கடக ராசியில் சந்திரன்–குரு இணைவு: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையை மாற்றும் கஜகேசரி ராஜயோகம்!
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கும். இந்த கிரகப் பெயர்ச்சிகளின் போது, சில சமயங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றிணைந்து சக்திவாய்ந்த ராஜயோகங்களை உருவாக்குகின்றன.
இத்தகைய யோகங்கள் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம், செல்வம், முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று ஜோதிடத்தில் நம்பப்படுகிறது.

அந்த வகையில், ஜூலை மாதத்தில் பல முக்கியமான கிரகச் சேர்க்கைகள் நிகழவுள்ளன. அவற்றில் மிகவும் சிறப்பான ஒன்றாக, ஜூலை 14 அன்று கடக ராசியில் சந்திரன் மற்றும் குருபகவான் இணைவதால் சக்திவாய்ந்த கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது.
இதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்ததாலும், தொழில் மற்றும், நிதி ரீதியில் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குறுகிய கால ராஜயோகம் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை தரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும்.
வேலை செய்பவர்களுக்கு அங்கீகாரமும் பதவி உயர்வுக்கான வாய்ப்பும் தானாகவே அமையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும், தொழிலில் இருந்த தடைகள் நீங்கும்.எதிர்பாராத பண வரவால் நிதி நிலை மேம்படும்.
குடும்பம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான நீண்ட நாள் பிரச்சினைகள் குறையலாம். குடும்பத்தினரும் மேலதிகாரிகளும் ஆதரவாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபமும் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகி, வருமானம் அதிகரிக்கலாம். முக்கிய பொறுப்புகள் கிடைக்கும்.
பண நெருக்கடி குறைந்து, நிதி நிலை சீராகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையலாம். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
குழந்தைகள் முன்னேற்றம் அடைந்து சாதனைகள் படைக்கலாம். அதிர்ஷ்டம் அதிகரித்து, திடீர் பண ஆதாயங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக காத்திருந்த வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழிலில் வளர்ச்சி, நல்ல தொடர்புகள், அதிக தன்னம்பிக்கை மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
வேலை செய்பவர்களுக்கு முன்னேற்றமும், மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். இலக்குகளை எளிதாக அடைய முடியும். மனதில் தெளிவும் உற்சாகமும் பிறக்கும்.
பெற்றோர் மற்றும் குருவின் ஆதரவு கிடைக்கும். இந்த காலத்தில் நிதி நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு அசுர வளர்ச்சி உண்டாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |