இந்த தீவை யார் வாங்கினாலும் சபிக்கப்படுவார்கள் என்ன காரணம் தெரியுமா?
இத்தாலியில் தென்மேற்கு பகுதியில் உள்ள நேப்பிள்ஸ் வளைகுடாவில் இருக்கும் கயோலா தீவை யார் வாங்கினாலும் அவர்கள் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர் இது தொடர்பான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
கயோலா தீவு
இத்தாலி நாட்டின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் இந்த தீவிற்கு பின்னால் பல மர்மமான விஷயங்கள் உள்ளது. இந்த தீவை எல்லாருமே சபிக்கப்பட்ட தீவு என அழைக்கிறார்கள்.
இந்த தீவை யாரெல்லாம் சொந்தமாக வாங்கினார்களோ அவர்கள் எல்லாரும் தீரா கஷ்டத்தில் விழுந்ததாக வரலாற்றில் கூறப்படுகின்றது.
முதன்முதலில் லூகி நெக்ரி என்பவர் 1800-ன் பின்பகுதியில் இந்த தீவை சொந்தமாக வாங்கி, அங்கு ஒரு மாளிகையும் கட்டியுள்ளார்.
ஆனால் இந்த தீவை வாங்கிய சில காலத்திலேயே தனது சொத்துகள் அனைத்தையும் இழந்து நடுத்தெருவிற்கு வந்துள்ளார். இதன் பின்னர் இந்த தீவை கேஸ்பேர் ஆல்பெங்கே என்ற கப்பல் மாலுமி வாங்கினார்.
இவர் சில நாட்களில் கப்பல் விபத்தொன்றி்ல் இறந்தார். இதன் பின்னர் சில வருடங்கள் கழித்து மருந்து உற்பத்தி நிறுவனம் ஒன்றின் தலைவர் மவுரிஸ் சாண்டாஸ் இந்த தீவை வாங்கினார்.
செல்வச் செழிப்பில் வாழ்ந்த இவர் 1958 ம் ஆண்டு மனநல மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்டார். இதன் பின்னர் இந்த தீவை அமெரிக்க தொழிலதிபர் பவுல் கெட்டி வாங்கினார்.
அடுத்த சில மாதங்களில் அவரது 12 வயது இளைய மகன் மூளை கட்டி வந்து இறந்து போனான். அவரது மூத்த மகனும் தற்கொலை செய்து கொண்டான்.
இதற்கிடையில் அவரது இரண்டாவது மனைவி போதைப்பொருள் உண்டு இறந்தார். இந்த தீவை சொத்தமாக்குபவர்களுக்கு இந்த தீவின் துரதிஸ்டம் விடாமல் துரத்தியது. ஆனால் இதற்கான உண்மை காரணம் இதுவரை தெரிய வரவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |