புதிய சீரியலில் களமிறங்கிய பிரபல நடிகை... யார் இந்த சுந்தரி?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடரில் சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை தான் கேப்ரில்லா. தோற்றத்தில் அழகாக இல்லை என்று நினைத்து சராசரி பெண்ணின் வாழ்க்கைப் போராட்டம் பற்றி கதையே இதுவாகும். மனித வாழ்வில் உண்மையான அழகு என்பது தன்னம்பிக்கையே என்று இத்தொடரில் வரும் கேப்ரில்லா கூறியுள்ளார்.
ஐரா படத்தில் நடித்த கேப்ரியலா, அந்த பட வாய்ப்பு தனது ஸ்கின் டோன்க்காக தான் வந்தாதாகவும், தனது கலர் தான் தனது கனவை நிறைவேற்றியது என்று குறிப்பிட்டுள்ளார். டஸ்கி ஸ்கின் உடைய பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருப்பதை குறிப்பிட்ட கேப்ரியல்லா எல்லா வாய்ப்புகளும் ரிஜக்ட் ஆகுதேனு ஒரு கட்டத்துக்கு மேல் துணிச்சலாக நம்பிக்கையின் பேரில் எடுத்த முடிவுதான் சுந்தரி வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார்.
தன்னைப் போலவே பலரும் கடந்துவந்த இந்த மனநிலையைதான் இப்போது கதாபாத்திரங்கள் மூலம் பிரதிபலிப்பதாகவும், இந்த போராட்டத்தை நாம் சந்தித்தாலும், நாம் அழகு என்றும் நாம் முதலில் நம்ப வேண்டும் என்றும் கேப்ரியல்லா தெரிவித்துள்ளார்.
ஒளிப்பதிவாளரை திருமணம் செய்துள்ள கேப்ரியல்லா தனது கணவர் தனது கனவுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பதாகவும் நெகிழ்கிறார்.
மேலும் ரியாலிட்டி ஷோவில் எலிமினேட் ஆனது, குறும்படங்களில் கிடைத்த அங்கீகாரங்கள், ரிஜக்ட் ஆன படவாய்ப்புகள் என பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.